- Home
- Lifestyle
- Parenting Tips : பெற்றோரே! மூன்று விஷயங்களை செய்ங்க! குழந்தைங்க க்ளாஸ் டாப்பரா வருவாங்க!
Parenting Tips : பெற்றோரே! மூன்று விஷயங்களை செய்ங்க! குழந்தைங்க க்ளாஸ் டாப்பரா வருவாங்க!
குழந்தைகளுக்கு உணவில் செய்யும் சிறுமாற்றங்கள் கூட அவர்களுடைய மூளை ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும். குழந்தைகளின் மூளையை ஷார்ப்பாக மாற்றும் மூன்று விஷயங்களை இங்கு காணலாம்.

Ayurvedic Herbs for Kids
குழந்தைகளின் படிப்பு பெற்றோரின் பொறுப்பு என்றே எல்லோரும் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் குழந்தைகளுக்கு வழிகாட்டுவதும், நல்ல உணவைக் கொடுப்பதும் மட்டுமே பெற்றோரால் செய்யமுடிந்தவை. படிப்பதும், முன்னேறுவதும் குழந்தையின் சொந்த ஆர்வத்தில்தான் நடக்கும். இந்தப் பதிவில் குழந்தைகளுக்கு அறிவாற்றல் அதிகமாக எந்தெந்த மூலிகைகளை அன்றாட உணவோடு பெற்றோர் கொடுக்க வேண்டும் என இங்கு காணலாம்.
சங்கு புஷ்பம்
பார்க்கவே கண்ணைக் கவரும் வண்ணத்தில் இருக்கும் சங்கு புஷ்பம் மருத்துவ குணங்கள் நிறைந்தது. வாதம், பித்தம் ஆகியவற்றை சமநிலைப்படுத்த வல்லது. மகிழ்ச்சி ஹார்மோன்களான டோபமைன், செரடோனின் உற்பத்தியை மேம்படச் செய்யும். இந்த மூலிகையை குழந்தைகளுக்கு கொடுக்கும்போது மூளைக்கு இரத்த ஓட்டம் மேம்பட்டு மூளை நன்றாக செயல்படும். நினைவாற்றலும் மேம்படும். இதை வெந்நீரில் போட்டு 5 நிமிடங்களுக்கு பின் இட்லி மாவுடன் கலந்து அவிக்கலாம். மூலிகை டீயை பல குழந்தைகள் விரும்புவதில்லை.
அஸ்வகந்தா
அஸ்வகந்தாவை தூங்கும் முன் குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம். அவர்களின் தூக்கத்தின் தரம் மேம்படும். நல்ல தூக்கம் காரணமாக மறுநாள் பள்ளியில் மூளை சிறப்பாக செயல்படும். குழந்தைகள் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். அஸ்வகந்தா மூலிகை மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் சுரப்பைக் குறைக்கும். இதன் காரணமாக உணர்வுரீதியாக குழந்தைகள் சமநிலையுடன் இருப்பார்கள். நரம்பு மண்டல இயக்கமும் மேம்படும்.
வல்லாரை
இந்தக் கீரை மூளையின் வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெயர்போனது. வல்லாரை உண்பதால் மூளை செயல்பாடு, சிந்தனைத் திறன் மேம்படும். குழந்தைகள் கவனம் சிதறாமல் படிக்க உதவும். வல்லாரை பொடியை தேனுடன் கலந்து கொடுக்கலாம்.
மேலே சொல்லப்பட்டுள்ள மூன்று மூலிகைகளையும் அவ்வப்போது குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்கள் மூளையின் ஆரோக்கியம் மேம்படும். ஞாபக சக்தி, படைப்பாற்றல் போன்றவை சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கும். இது தவிர மனதை ஒருநிலைப்படுத்தும் தியானம், யோகா பயிற்சிகளையும் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பழக்கப்படுத்தலாம். இது அவர்களுடைய மனநலனை மேம்படுத்துவதோடு மூளை ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைத்திருக்க உதவும். இதனால் நன்றாக படிப்பார்கள்.