உங்கள் குழந்தை ரொம்ப ஒல்லியாக இருக்கிறது என்று கவலைப்படுகிறீர்களா? அப்படியானால் இந்த ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். கொழு கொழுன்னு மாறிடுவாங்க.

குழந்தைகள் ஒல்லியாக இருப்பதோ அல்லது குண்டாக இருப்பதோ என்பது பிரச்சனையில்லை. ஆரோக்கியமாக இருப்பது தான் முக்கியம். ஆம் குழந்தைகள் சரியான வயதில் சரியான எடையுடன் இருந்தால் பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை. ஆனால் குழந்தைகள் வயதிற்கு ஏற்ப எடை மற்றும் உயரம் இல்லையென்றால் அது கண்டிப்பாக வருந்த வேண்டிய விஷயம். ஆகவே இப்படி இருக்கும் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்துவது பெற்றோரின் கடமை. எனவே இத்தகைய குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை கொடுக்க வேண்டும். அதுவும் குழந்தைகளுக்கு பிடித்ததாக தான் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் அதை நன்றாக சாப்பிடுவார்கள். இத்தகைய சூழ்நிலையில், ரொம்பவே ஒல்லியாக இருக்கும் உங்கள் குழந்தைக்கு வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து இந்த ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அவர்கள் அதை விரும்பி சாப்பிடுவார்கள். புஷ்டியாகவும் மாறிவிடுவார்கள். சரி இப்போது அதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பொட்டுக்கடலை - 1 கப் 

வெல்லம் - 2 ஸ்பூன் (பொடியாக்கியது) 

தேங்காய் துருவல் - அரை கப்

செய்முறை :

இதற்கு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பொட்டுக்கடலையை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை நன்கு ஆற வைத்து பொடியாக்கி அதில் வெல்லம் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து சின்ன சின்ன உருண்டைகளாக பிரித்து வைத்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் சூப்பரான ஸ்னாக்ஸ் ரெடி. இந்த ஸ்நாக்ஸை உங்களது குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள்.

பொட்டுக்கடலை நன்மைகள் :

- எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு பொட்டுக்கடலை ரொம்பவே நல்லது. ஏனெனில் 100 கிராம் வறுத்த பொட்டுக்கடலையில் சுமார் 18.64 கிராம் புரோட்டின் மற்றும் 16.6 கிராம் நார்ச்சத்து உள்ளன. இது தவிர இது புரதத்தின் சிறந்த ஆதாரமாக இருப்பதால் எடை குறைப்பு பயணத்தில் இருப்பவர்கள் வறுத்த பொட்டுக்கடலையை சாப்பிடலாம்.

- மாங்கனீஸ், பாஸ்பரஸ், காப்பர் ஃபோலேட் போன்ற இதய நோய் அபாயங்களை குறைக்கும் சத்துக்கள் இதில் உள்ளன.

- உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று நோய்கள் வருவதை தடுக்க பொட்டுக்கடலை உதவுகிறது.

- சர்க்கரை நோயாளிகளுக்கு வறுத்த பொட்டுக்கடலை மிகவும் நன்மை பயக்கும்.

- மூட்டு வலி, எலும்பு பலவீனம் போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளித்து, எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க வறுத்த பொட்டுக்கடலை உதவுகிறது.

- இரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பொட்டுக்கடலை உதவுகிறது.

- பொட்டுக்கடலையில் செலினியம் அதிகமாக இருப்பதால் அது புற்றுநோயின் அபாயத்தை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

பொட்டுக்கடலையில் இப்படி ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருந்தாலும், அதை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் வயிற்று கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.