- Home
- Cinema
- காந்தாரா ஓடுது தாறுமாறா..! தமிழ் படம் இட்லி கடை ஏன் ஆகுது நேர்மாறா?? அடுக்குமொழியில் போட்டு பொளக்கும் டி. ஆர்
காந்தாரா ஓடுது தாறுமாறா..! தமிழ் படம் இட்லி கடை ஏன் ஆகுது நேர்மாறா?? அடுக்குமொழியில் போட்டு பொளக்கும் டி. ஆர்
தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்கள் பான் இந்தியா அளவில் கலக்கி வரும் நிலையில், தமிழ் சினிமா தடுமாறுவதைப் பற்றி தன் ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார் டி.ஆர்.

T Rajendar Bold analysis
இயக்குனர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் ஒரு ஆல்ரவுண்டராக இருந்தவர் டி.ராஜேந்தர். இவர் தற்போது சினிமாவில் தலைகாட்டாவிட்டாலும், அவர் இயக்கிய படங்கள் காலம் கடந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளனர். இந்த நிலையில், சமீபத்திய வெளியீடான காந்தாரா பற்றி புகழ்ந்து பேசியுள்ள டி.ஆர். அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் தமிழ் சினிமா தடுமாறி வருவதாக தன் ஆதங்கத்தையும் கொட்டி இருக்கிறார். அதையும் தன்னுடைய சிக்னேச்சர் ஸ்டைலான அடுக்குமொழியில் சொல்லி இருக்கிறார். அவர் கூறியதை கீழே காணலாம்.
டி.ஆரின் அடுக்குமொழி
“கன்னட படம் காந்தாரா ஓடுது தாறு மாறா.. ஆனா தமிழ் படம் ஏன் ஆவுது இப்படி நேர் மாறா?
மலையாள படம் ஓடுது... கலக்குது லோகா; ஆனா தமிழ் படம் ஆவுது வீக்கா... படம் உலகம் ஆவுது ஷாக்கா.
கேட்டா பட்ஜெட் பத்தலேனு சொல்லிகிட்டு இருக்க கூடாது சாக்கா... படம் எடுக்குறது என்ன ஒரு ஜோக்கா.
கதாநாயகனோட கால்ஷீட்டுக்காக புடிச்சிட்டுருந்தா போதாது காக்கா.
டெயிலர்னு சொன்னா துணியில போடத் தெரியனும் டாக்கா... தயாரிப்பாளர்னு சொன்னா படம் எடுக்க தெரியனும் நேக்கா.
மத்த மொழி படம் ஓடுறது பாத்து எனக்கு பொறாமை இல்லை.”
ஆதங்கத்தை கொட்டிய டி.ஆர்
பக்கத்துவீட்டுக் காரங்க இருக்காங்க பளபளப்பா... அடுத்தவீட்டு காரங்க இருக்காங்க அட்டகாசமா... அடுத்த வீட்டு காரங்க இருக்காங்க அமர்க்களமானு பார்த்தா எனக்கு ஆனந்தம். ஆனா அதே நேரத்துல என்வீடு... என் தமிழ் சினிமா இப்படி இருக்கேனு எனக்கு ஆதங்கம். தமிழ் சினிமா எடுத்துக்கொண்டால் பொங்கலில் ஆரம்பித்து, இப்போ தீபாவளி வரப்போகுது. இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 200 படங்கள் ரிலீஸ் ஆகியிருக்குறதா சொல்றாங்க.
டி.ஆர் சொன்ன ஹிட்லிஸ்ட்
இதில் நல்ல வெற்றியை கொடுத்த படம், வசூலை குவித்த படம்னு விநியோகஸ்தர்கள் சொல்வது மதகஜராஜா, டிராகன், குட் பேட் அக்லி, டூரிஸ்ட் ஃபேமிலி, மாமன், தலைவன் தலைவி இதோட லிஸ்ட்டை நிறுத்துகிறார்கள். இதோட போடுறாங்க பிரேக்கு... தமிழ் திரையுலகம் ஏன் ஏற்படுத்த மாட்டேங்குது ஒரு ரெக்கார்டு பிரேக்கு.
வெற்றிபெற்ற உடனே அதற்கு கட்டுறாங்க தோரணம்... ஆனா கீழ விழுந்துட்டா அதற்கு தேடனும் காரணம். ஒரு பட சக்சஸ் ஆகனும்னா, படத்துல நல்ல கதை இருக்கனும். பர்ஸ்ட் சப்ஜெக்ட்டு... அப்புறம் தான் பட்ஜெட்டு. சுவார் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும். அதேபோல் ஒரு நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால் தான் இயக்குனர் உருவாக முடியும் என அந்த டி.ராஜேந்தர் கூறி இருக்கிறார்.