இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:14 AM (IST) Dec 31
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அணியின் அனுபவமிக்க வீரர்களான பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இருவரும் அணியில் இல்லாத பட்சத்தில், இந்திய அணி 3 பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும்.
11:12 AM (IST) Dec 31
2026 Mesha Rasi Palan in Tamil: 2026 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, வேலை மற்றும் தொழில், செய்ய வேண்டிய பரிகாரங்கள் ஆகியவை குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
11:03 AM (IST) Dec 31
2025 குட்பை சொல்லிட்டு உறவினர், நண்பர்களுடன் 2026 புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துகொள்ள சிறந்த வாழ்த்துகள் இங்கே...
10:49 AM (IST) Dec 31
2025 ஆம் ஆண்டு இன்றுடன் முடிவடைகிறது. இதனுடன், மூன்று மிக முக்கியமான காலக்கெடுவும் இன்றுடன் முடிவடைகிறது. மேலும் சில பெரிய மாற்றங்களும் ஜனவரியில் ஏற்படும். இந்த மூன்று பணிகளையும் இன்று முடிக்கத் தவறினால் இழப்புகள் ஏற்படலாம்.
10:37 AM (IST) Dec 31
கோவை சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் பேராசிரியர், ஆய்வக மேற்பார்வையாளர், கற்பித்தல் அல்லாத பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
10:37 AM (IST) Dec 31
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான பருத்திவீரன் படத்தில் இடம்பெற்ற ஊரோரம் புளியமரம் பாடலைப் பாடிய பாடகி மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 75.
10:18 AM (IST) Dec 31
ஆளுங்கட்சி நிம்மதியாக பணிகளை கவனிப்பதும், எதிர்க்கட்சி களத்தில் நின்று போராடுவதும் தான் அரசியல் இயல்பு ஆனால் தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுக சரணாகதி அடைந்து சாய்ந்து கிடப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
10:18 AM (IST) Dec 31
இந்தியாவின் 'சிக்கன் நெக்' பகுதியை துண்டிப்போம் என்ற வங்கதேச தீவிரவாத அமைப்புகளின் மிரட்டலுக்கு நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா அலாங் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
10:17 AM (IST) Dec 31
Pongal Holidays: 2026 ஜனவரி மாதத்தில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு சுமார் 15 நாட்கள் விடுமுறை வர வாய்ப்புள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் தொடர் விடுமுறையும், குடியரசு தினத்தை ஒட்டி 3 நாட்கள் விடுமுறையும் கிடைக்க உள்ளது.
10:10 AM (IST) Dec 31
சூர்யாவும் மமிதா பைஜுவும் முதல்முறையாக இணையும் புதிய படத்தின் கதைக்களம் பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அப்படத்தைப்பற்றி தயாரிப்பாளர் நாக வம்சி பேசியுள்ளதை பார்க்கலாம்.
09:51 AM (IST) Dec 31
இந்திய ரிசர்வ் வங்கி 2026 ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தேசிய, மத மற்றும் மாநில விடுமுறைகள் உட்பட 100 நாட்களுக்கு மேல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
09:49 AM (IST) Dec 31
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் சொத்துக்காக சண்டை போட்ட நிலையில், அவனுக்கு சொத்தை பிரித்து தர அண்ணாமலை முடிவு செய்துவிட்டு வீட்டை விட்டு தொலைந்து போகிறார்.
09:48 AM (IST) Dec 31
3 நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது, இது இல்லத்தரசிகள், முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.உலகளாவிய மற்றும் உள்ளூர் சந்தை காரணங்களால் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதால், தங்கம் வாங்க இது ஒரு நல்ல வாய்ப்பாக கூறப்படுகிறது
09:32 AM (IST) Dec 31
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு உறைபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் காணப்படும்.
09:18 AM (IST) Dec 31
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் Roadster X+ (9.1 kWh) மாடல், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4680 பாரத் செல் பேட்டரியுடன் அரசு சான்றிதழைப் பெற்றுள்ளது. iCAT மற்றும் ARAI அமைப்புகளிடமிருந்து கடுமையான சோதனைகளுக்குப் பிறகு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09:00 AM (IST) Dec 31
2026 ஜனவரி 1 முதல், பிஎம் கிசான் திட்டத்தில் கிசான் ஐடி, 8வது ஊதியக்குழு அமல், மற்றும் ஆதார்-பான் இணைப்பு காலக்கெடு போன்ற முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இவை பொதுமக்களின் நிதி நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
08:58 AM (IST) Dec 31
ஜம்மு காஷ்மீரின் செனாப் பள்ளத்தாக்கின் உயரமான பகுதிகளில் தீவிர பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு மத்தியில், தோடா மாவட்டத்தில் கிராம மக்களுக்கு துப்பாக்கி பயிற்சி அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
08:52 AM (IST) Dec 31
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி ஃபுட் டிரக் பிசினஸை தொடங்கியதை அறிந்த ஆதி குணசேகரன், தன்னுடைய அடியாளுக்கு போன் போட்டு சோலியை முடிக்க சொல்லி உத்தரவிடுகிறார்.
08:47 AM (IST) Dec 31
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்காக குறைந்த கட்டணத்தில் ஏற்றுமதி-இறக்குமதி பயிற்சி வழங்குகிறது.