- Home
- Tamil Nadu News
- அச்சச்சோ! ரேஷன் கார்டு இருந்தும் இவர்களுக்கு 'பொங்கல் பரிசு' கிடையாது.. ஏன் தெரியுமா?
அச்சச்சோ! ரேஷன் கார்டு இருந்தும் இவர்களுக்கு 'பொங்கல் பரிசு' கிடையாது.. ஏன் தெரியுமா?
பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு ரெடியாக உள்ளது. பொங்கல் பரிசுடன் 5,000 ரூபாய் ரொக்கப்பணமும் வழங்க திமுக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வருகிறது. திமுக அரசு கடந்த 2022, 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கிய நிலையில், கடந்த ஆண்டு ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை.
பொங்கல் பரிசுடன் ரூ.5,000 கிடைக்குமா?
இந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு ரெடியாக உள்ளது. பொங்கல் பரிசுடன் 5,000 ரூபாய் ரொக்கப்பணமும் வழங்க திமுக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், ரேஷன் கார்டு வைத்திருந்தாலும் ஒரு சிலருக்கு பொங்கல் பரிசு கிடைக்காது என்பது உங்களுக்கு தெரியுமா? இது தொடர்பாக முழு விவரங்களை பார்க்கலாம்.
பொங்கல் பரிசு யாருக்கெல்லாம் கிடைக்காது?
அதாவது ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக சர்க்கரை மட்டும் வாங்கும் வெள்ளை நிற அட்டைதாரர்களுக்கு (White/Sugar Cards) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதில்லை. ரேஷனில் எந்தப் பொருளும் வாங்காமல் வெறும் அடையாள சான்றுக்காக மட்டும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு கிடைக்காது.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள்
அரசு விதிகளின்படி மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்களில் ஒரு பிரிவினர் ஆகியோருக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இதேபோல் ரேஷன் கார்டு வைத்திருந்து நீண்ட நாட்களாக பொருட்கள் வாங்காமல் முடக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் பொங்கல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை.
என்னென்ன பொருட்கள் இருக்கும்?
அதே வேளையில் ரேஷன் அரிசி அட்டைதாரர்கள் PHH, PHH-AAY, NPHH ஆகிய வகையினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும். பொங்கல் பரிசு தொகுப்பில் வழக்கமாக இலவச வேட்டி, சேலையுடன் கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இருக்கும்.
இந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பில் கூடுதல் பொருட்கள் இருக்குமா? ரொக்கப்பணம் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

