- Home
- Tamil Nadu News
- Pongal Gift: பொங்கல் பரிசு 5,000 ரூபாய்?.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்.. இல்லத்தரசிகள் குஷி!
Pongal Gift: பொங்கல் பரிசு 5,000 ரூபாய்?.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்.. இல்லத்தரசிகள் குஷி!
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'பொங்கல் பரிசுடன் ரூ.5,000 ரொக்கப்பணம் வழங்க வேண்டும்' என திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வருகிறது.
2021ல் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக அதிமுக பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வழங்கியது. அதன்பிறகு ஆட்சி அமைத்த திமுக அரசு 2022, 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கியது.
பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம்
ஆனால் 2025ம் ஆண்டு திமுக அரசு வெறும் பொங்கல் பரிசு மட்டுமே வழங்கியது. ரொக்கப் பணம் ஏதும் வழங்கவில்லை. ஆனால் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வரும் பொங்கலுக்கு பரிசுத்தொகுப்புடன் ரொக்கப்பணமும் சேர்த்து திமுக அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் பரிசு ரகசியம்
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'பொங்கல் பரிசுடன் ரூ.5,000 ரொக்கப்பணம் வழங்க வேண்டும்' என திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதியிடம் பொங்கல் பரிசு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், 'பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு என்ன பரிசு கொடுப்போம் என்பது ரகசியம். அதை இப்போது சொல்ல முடியாது. அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்' என்று தெரிவித்தார்.
தேர்தலை மனதில் வைத்து காய் நகர்த்தும் திமுக
பொங்கல் பரிசு ரகசியம் என்று அமைச்சர் சொல்லியிருப்பதன் மூலம் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.5,000 ரொக்கப் பணத்தையும் திமுக அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சட்டப்பேரவை தேர்தல் உள்ளதால் பெண்களின் வாக்குகளை குறிவைக்க திமுகவுக்கு இதைவிட பெரிய வாய்ப்பு ஏதும் கிடைக்காது.
ஏற்கெனவே தேர்தலை மனதில் வைத்து மாதம்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகையை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?
இந்த நிலையில், தேர்தலுக்கு முன்பாக பொங்கல் பரிசு லட்டுபோல் வந்து மாட்டி இருப்பதால் ரொக்கப்பணத்தை அதிகப்படுத்தி பெண்களின் மனம்குளிர செய்யும்படி திமுக அரசு முடிவு செய்துள்ளது.
பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு பிறகு பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

