- Home
- Astrology
- Jan 01 Puthandu Rasi Palan: புத்தாண்டின் முதல் நாளில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்.! மேஷம் to மீனம் வரை புத்தாண்டு ராசி பலன்கள்.!
Jan 01 Puthandu Rasi Palan: புத்தாண்டின் முதல் நாளில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்.! மேஷம் to மீனம் வரை புத்தாண்டு ராசி பலன்கள்.!
January 01, 2026 Daily Horoscope for 12 zodiac signs: ஜனவரி 01, 2026 12 ராசிகளுக்குமான பொது பலன்கள் குறித்தும், அதிர்ஷ்டம் பெறும் ராசிகள், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
112

Image Credit : Pinterest
மேஷம்:
- மேஷ ராசியினருக்கு இந்த ஆண்டு முன்னேற்றமான ஆண்டாக இருக்கும் சனிபகவான் 12ஆம் வீட்டில் இருப்பதால் விரைய சனி நடந்தாலும் குருவின் பார்வை சாதகமாக இருக்கும் புதிய முயற்சிகள் கைகூடும் தொழில் ரீதியாக சவால்கள் வந்தாலும் தன்னம்பிக்கையால் வெல்வீர்கள் செலவுகள் அதிகரிக்கக்கூடும் திட்டமிட்டு செயல்படுவது அவசியம்
- அதிர்ஷ்ட எண்: 9, 1.
- அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெள்ளை.
212
Image Credit : stockPhoto
ரிஷபம்:
- ரிஷப ராசிக்கு 2026 ஆம் ஆண்டு பொற்காலமாக அமையும். லாப ஸ்தானத்தில் சனி இருப்பதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம்.
- அதிர்ஷ்ட எண்: 6, 2.
- அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்.
312
Image Credit : Pinterest
மிதுனம்:
- மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும் ஆண்டாக இருக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். கடன் பிரச்சனைகள் தீரும். வருமானம் சீராகும்.
- அதிர்ஷ்ட எண்: 5, 3.
- அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்.
412
Image Credit : stockPhoto
கடகம்:
- கடக ராசிக்கு ஜென்ம குருவாக இருந்தாலும் அவர் உச்சம் பெறுவதால் நற்பலன்கள் அதிகம் நடக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. சுப செலவுகள் அதிகரிக்கலாம். சேமிப்பில் கவனம் தேவை.
- அதிர்ஷ்ட எண்: 2, 7.
- அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, சந்தனம்.
512
Image Credit : Pinterest
சிம்மம்:
- சிம்ம ராசிக்கு இந்த ஆண்டு தைரியமும், துணிச்சலும் கூடும். ஆளுமைத் திறன் வெளிப்படும். பிள்ளைகளால் பெருமை சேரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். எதிரிகள் விலகி ஓடுவார்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
- அதிர்ஷ்ட எண்: 1, 9.
- அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, மெரூன்.
612
Image Credit : Pinterest
கன்னி:
- கன்னி ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் ஆண்டாக இருக்கும். திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.
- அதிர்ஷ்ட எண்: 5, 6.
- அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மெரூன்.
712
Image Credit : Pinterest
துலாம்:
- துலாம் ராசிக்கு சவால்கள் அனைத்தையும் தாண்டி சாதனை படைக்கும் ஆண்டாக இருக்கும். குருவின் சுப பார்வை உங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும். வேலையில் இருந்த இறுக்கமான சூழல்கள் மாறும். ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனம் தேவைப்படலாம். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கவும்.
- அதிர்ஷ்ட எண்: 6,8.
- அதிர்ஷ்ட நிறம்: பிங்க், சாம்பல்.
812
Image Credit : stockPhoto
விருச்சிகம்:
- விருச்சிக ராசிக்காரர்களுக்கு மன மகிழ்ச்சி தரும் ஆண்டாக 2026 ஆம் ஆண்டு அமையும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
- அதிர்ஷ்ட எண்: 9, 5.
- அதிர்ஷ்ட நிறம்: அடர்சிவப்பு, மஞ்சள்.
912
Image Credit : stockPhoto
தனுசு:
- தனுசு ராசிக்காரர்களுக்கு தடைபட்ட காரியங்கள் அனைத்தும் தடையின்றி முடியும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வீடு வாகனம் மாற்றங்கள் நடக்கும். தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தெரியும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானம், ஐடி, ஊடகம் ஆகிய துறையில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும்.
- அதிர்ஷ்ட எண்: 3, 1.
- அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், அடர்பச்சை.
1012
Image Credit : Pinterest
மகரம்:
- மகர ராசிக்கு ஏழரை சனி முடிவுக்கு வருவதால் பெரிய நிம்மதி கிடைக்கும். மன அழுத்தம் நீங்கி புதிய உற்சாகம் பிறக்கும். சகோதரர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். தொழில் போட்டிகள் விலகி லாபம் அதிகரிக்கத் தொடங்கும்.
- அதிர்ஷ்ட எண்: 2, 4.
- அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், சாம்பல்.
1112
Image Credit : Pinterest
கும்பம்:
- கும்ப ராசிக்கு ஜென்ம சனி விலகி பாத சனியாக தொடர்வதால் பேச்சில் நிதானம் தேவை. குருவின் பார்வை இருப்பதால் தீமைகள் குறையும். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கலாம். கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும். குடும்ப தேவைகளுக்காக பணம் செலவழிக்க நேரலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருங்கள்.
- அதிர்ஷ்ட எண்: 8, 5.
- அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, கருப்பு.
1212
Image Credit : stockPhoto
மீனம்:
- மீன ராசிக்கு ஜென்ம சனி நடப்பதால் ஆரோக்கியம் மற்றும் உணவில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். குரு உங்களது ராசியைப் பார்ப்பது பலமாக அமையும். மற்றவர்களுக்கு ஜாமின் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். வருமானம் வந்தாலும் கையில் தாங்காது. சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது.
- அதிர்ஷ்ட எண்: 3, 9.
- அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், அடர்நீலம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
Latest Videos

