Singampuli Insulted Mistake as Beggar Incident : நடிகர் சிங்கம்புலியை நிஜமான பிச்சைக்காரர் என்று நினைத்து ஒருவர் திட்டிய சுவாரஸ்யமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் முழு விவரம் இதோ.
காமெடி நடிகர் மற்றும் இயக்குனர் உதவி இயக்குனர் என பன்முக திறமைகளைக் கொண்டவர் சிங்கம்புலி இவர் பல படங்களை இயக்கியும் உள்ளார். இவர் நடித்த மாயாண்டி குடும்பத்தார் என்னும் படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலம் பெற்று வந்தார் அதில் கூறும் ஒரு டயலாக் இவருக்கு மிகவும் வரவேற்பை பெற்று தந்தது சோறு சோறு குழம்பு குழம்பு என்னும் டயலாக் இவர் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை மிகவும் பிரபலம் அடைந்தார். தேசிங்கு ராஜா இன்னும் படத்தில் சிங்கம் புலி செய்யாத சேட்டையே இல்லை என்றே கூறலாம் மிகவும் அற்புதமாக நடித்திருப்பார் நகைச்சுவை கலைந்த இந்த படத்தில் இவரது நகைச்சுவை மிகப் பிரபலம் அடைந்திருக்கும்.
சிங்கம்புலியின் உண்மையான நடிப்பு: நடிகர் மற்றும் இயக்குனர் பணியாற்றி வரும் சிங்கம்புலி நான் கடவுள் படத்தில் உதவி இயக்குனராகவும் இருந்து வந்தார் . இந்த படத்தில் அவரும் ஒரு பிச்சைக்காரன் வேடம் அணிந்து நடித்திருப்பார். பிச்சைக்காரர்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்த பாலா தென் மாவட்டங்களில் இருக்கும் கோயில்களில் உள்ள பிச்சைக்காரர்களை அழைத்து அதில் 30 பேரை செலக்ட் செய்தார் பாலா. உண்மையான பிச்சைக்காரர்களை உடன் நடித்தேன் நான் என்றும் சிங்கம்புலி கூறியுள்ளார். அப்பொழுது நான் பாலாவிற்கு அசிஸ்டன்ட் டைரக்டராக இருக்கும்போது மைக்கை வைத்து பிச்சைக்காரர்களை அங்கு போ இங்கு போ என்று கூறும்பொழுது நீ என்ன எங்களையே வேலை வாங்குர என்று ஒரு பிச்சைக்கார பெண்மணி கூறியிருக்கிறார்.
அப்பொழுது நான் அசிஸ்டன்ட் டைரக்டர்மா நான் சொல்வதை நீ கேளு என்று கூற அதற்கு பிச்சைக்கார பெண்மணி நீ எந்த கோயிலில் இருந்து வந்த என்று என்னை பார்த்து கேட்டார். நான் அந்தப் பெண்மணியிடம் இந்த படத்தின் உதவி இயக்குனர் நான் உங்களுடன் நானும் நடிக்கிறேன் என்று கூறினேன். ஏனென்றால் எனது உடை மூன்று வருடங்களாக துவைக்காமல் இருந்தது. அழுக்காகவும் துர்நாற்றம் அடிக்கக் கூடியதாகவும் இருந்ததால் அந்த பெண்மணி என்னிடம் அப்படி கேட்டால் அது மட்டுமல்லாமல் நான் மூன்று வருடமாக சேவிங் செய்யாமல் தாடியை வளர்த்துக் கொண்டிருந்ததாகவும் கூறினார். நான் அவர்களுள் ஒருவனாகவே இருந்தேன் என்று கூறினார்.
அகோரிகளின் வாழ்க்கை, ஊனமுற்றோர், பிணங்களைச் சுடும் காவலாளிகள் போன்ற சமூகத்தின் ஒதுக்கப்பட்ட மக்களின் துயரங்கள் மற்றும் வலிகளைப் எடுத்துக் கூறும் வகையில் இந்த படம் அமைந்திருக்கும். நான் கடவுள் படத்தில் சாமியார் வேடத்தில் நடித்த இரண்டு நபர்கள் பாலா சாரிடம் திட்டு வாங்கினார் அதற்கு பின்பு அவர்கள் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றனர் அவர்களை தேடி நான் போகும் போது அவர்கள் இருவரும் ஒரு தியேட்டரில் இங்கிலீஷ் படம் பார்த்துக் கொண்டிருந்தனர் அதன் பிறகு அவர்களை நான் நீங்கள் நடியுங்கள் உங்களுக்கு நல்ல பேரு கிடைக்கும் சம்பளம் கிடைக்கும் என்று சொல்லி அழைத்து வந்து நடிக்க வைத்தேன் என்றும் அவர் கூறினார்.
