Dhanush d54 movie title leaked Aruvadai : தனுஷின் 54-வது படத்தின் தலைப்பு குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. D54 படத்திற்கு என்ன பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

தனுஷின் 54வது படமான D54 படத்திற்கு தற்போது டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள டி54 படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில் 2026 அம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று தெரிகிறது. சில வாரங்களுக்கு முன்பு படப்பிடிப்பை முடித்து விட்டோம் என்று அதிகாரப்பூர்வமாக தனுஷ் மற்றும் படக்குழுவினர் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

இயக்குனர்:

இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் டி54 (D54). போர் தொழில் மூலமாக பிரபலமான இயக்குநர் விக்னேஷ் ராஜாவிற்கு இது 2ஆவது படம். போர் தொழில் இவருக்கு பெரிய வெற்றியை தந்தது. அதிரடி கதைக்களம் கொண்ட இந்த திரைப்படம் மிகவும் விறுவிறுப்பாகவும் சண்டை காட்சிகள் நிறைந்ததாகவும் காணப்படும். இப்போது தனுஷை வைத்து தனது 2ஆவது படத்தை இயக்கியுள்ளார். இப்போது வளர்ந்து வரும் இயக்குனரில் இவரும் ஒன்றாக இருப்பது ரசிகர்மத்தில் பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது. சிறிது காலத்துக்குள்ளையே படத்தை முடித்தது தனுஷிற்கு மிகவும் வியப்பாக இருந்ததாகவும் அவருடைய வேலைப்பாடுகள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

படத்திற்கு சூட்டப்பட்ட பெயர்:

தற்காலிகமாகD54 என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பெயர் அறுவடை என்று தமிழ் பெயரையே படத்திற்கு சூட்டியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. அறுவை என்பது விவசாயிகள் பயன்படுத்தும் வார்த்தை. அப்படியென்றால் இந்தப் படம் விவசாயிகள் தொடர்பான கதையா என்ற கேள்வியும் எழுகிறது.

இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து மமிதா பைஜு நடித்துள்ளார். 2026ஆம் ஆண்டு மமிதா பைஜூவிற்கு சிறப்பான ஒரு ஆண்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது விஜய்யின் ஜன நாயகன் படத்தில் நடித்துள்ளார். தனுஷ் படத்திலும் நடித்துவிட்டார். சூர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், மேலும் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு பிப்ரவரி 2026இல் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.