Anil Ravipudi Jana Nayagan Movie Controversy : ஜனநாயகன் திரைப்படத்தில் எனக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா இல்லையா என்று கேள்வி எழுப்பி உள்ளார் இயக்குனர் அணில் ரவிபுடி
ஜன நாயகன் படத்தில் தனக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா? இல்லையா என்பது பற்றி படம் வெளியான பிறகு தான் தெரிய வரும் என்று பாலய்யாவின் பகவந்த் கேசரி பட இயக்குநர் அணில் ரவிபுடி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் ஏன் அப்படி சொன்னார் என்பது பற்றி முழுவதுமாக பார்க்கலாம். விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. H.வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும், பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். மமிதா பைஜூ, நரேன், பிரியாமணி, பிரகாஷ்ராஜ் என நட்சத்திரங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள்.
விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மட்டுமன்றி விஜய்யின் நண்பர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இந்த விழா தொடங்கப்பட்ட உடனே விழா அரங்கில் இருந்து பல்வேறு வீடியோக்கள், புகைப்படங்கள், ரசிகர்களால் பகிரப்பட்டது. இந்நிகழ்வில் விஜய்யின் அப்பா, அம்மாவும் கலந்து கொண்டனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 4ஆம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.
ஜன நாயகன் திரைப்படத்தின் பணிகள் தொடங்கப்பட்ட நாள் முதல் இப்படம் தெலுங்கு திரைப்படமான பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என்று பேசப்பட்டு வருகிறது. முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்: மலேசியாவில் நடந்த ஜனநாயகன் ஆடியோ லான்சில் எச் வினோத் பேசும்போது இந்த படம் எந்த படத்திற்கும் ரீமேக் அல்ல இது விஜய் படம் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.
ரீமிக்ஸ் தானா இந்த படம் என்றும் எனக்கு பங்கு இருக்கிறதா? இல்லையா? அனில் ரவிபுடியிடம் செய்தியாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர் ஜன நாயகன் படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்கா? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்குப் பதில் தந்த இயக்குநர் அனில் ரவிபுடி விஜய் சார் ஒரு ஜென்டில்மேன் என்றும் அவருடைய படத்தில் எனக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா இல்லையா என்பது படம் வெளியான பிறகுதான் தெரியும். எச். வினோத் மாதிரியே அணில் ரவிபுடியும் இதை தளபதி விஜய் படமாகவே கருதுவோம் எனக் கூறியிருக்கிறார். அவரை நான் 2 முறை சந்தித்திருக்கிறேன் என்று தானும் விஜய் ரசிகர் என்று சொல்லாமல் கூறியிருக்கிறார்.
உண்மையில் ஜன நாயகன் பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்கா இல்லையா என்பது படம் வெளியான பிறகு தெரியவரும். இந்தப் படம் எமோஷனல் படமாக இல்லாமல் நம்பிக்கை தரக் கூடிய படமாக இருக்கும். ஜன நாயகன் முடிவல்ல தளபதி விஜய்யின் புதிய தொடக்கம் என்று இயக்குநர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
