இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:53 AM (IST) Jan 26
அஜித்தின் 50வது படமான மங்காத்தா ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு, திரையரங்குகளில் திருவிழா கோலத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய படங்களுக்கு நிகராக வசூல் வேட்டை நடத்தி, கில்லி படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
10:43 AM (IST) Jan 26
இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான 3வது டி20 போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் அபிஷேக் சர்மா 5 புதிய சாதனைகளையும் படைத்துள்ளார். இப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.
10:29 AM (IST) Jan 26
Shukra Peyarchi 2026 Palangal: பிப்ரவரி 6, 2026 அன்று சுக்கிரன் கும்ப ராசிக்குள் நுழைகிறார். சுக்கிரனின் கும்ப ராசி சஞ்சாரத்தால் மூன்று ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
09:50 AM (IST) Jan 26
90-களின் முன்னணி நாயகியான சங்கவி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள 'பாளையத்து அம்மன்' என்ற பக்தித் தொடரில் அவர் நாயகியாக தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்குகிறார்.
09:22 AM (IST) Jan 26
பாபா வாங்காவின் 2026 பொருளாதார நெருக்கடி கணிப்புடன் தங்க விலை உயர்வை இணைத்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன. பாபா வாங்கா முன்கணிப்புகள் கடந்த காலத்தில் பல முறை வைரலாகி உள்ளன.
09:15 AM (IST) Jan 26
உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் மலையாள நடிகர் மம்முட்டி ஆகியோரின் 40 ஆண்டுகால திரைமறைவு நட்பு குறித்து இந்த கட்டுரை விவரிக்கிறது. இருவரும் இணைந்து நடிக்காத போதிலும், ஒருவரையொருவர் மதித்து, சங்க கால நட்பைப் போல தங்கள் உறவைப் பேணி வருகின்றனர்.
08:46 AM (IST) Jan 26
நாட்டின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்று வரும் குடியரசு தின விழாவில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
08:42 AM (IST) Jan 26
டாடா மோட்டார்ஸ், ஃப்ளீட் வாடிக்கையாளர்களுக்காக புதிய XPRES காரை அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வகைகளில் கிடைக்கும் இந்த கார், குறைந்த செலவில் அதிக பயன்பாட்டை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.