- Home
- Politics
- விஜய் போட்டு வைத்த மெகா ப்ளான்..! மோப்பம் பிடித்த அமித் ஷா..! தவெகவுக்கு இனி ஒரே ஆப்ஷன்தான்..!
விஜய் போட்டு வைத்த மெகா ப்ளான்..! மோப்பம் பிடித்த அமித் ஷா..! தவெகவுக்கு இனி ஒரே ஆப்ஷன்தான்..!
விஜய் தமிழகத்தில் கை சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்தால் அது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அட்வான்டேஜாக அமைந்துவிடும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் கருதுகிறது.

விஜயின் தவெகவுக்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது. தேர்தல் ஆணையமும் தவெக கேட்டபடியே விசில் சின்னத்தை வழங்கி இருக்கிறது. மாமல்லபுரத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பலரும் உற்சாகத்துடன் விசில் சின்னத்துடன் தான் பங்கேற்றனர். அரங்கத்தினுள் விசில் சத்தம் கேட்டபடியே இருந்தது. அதேபோல தவெக கட்சிக்கொடியின் நிறமான மஞ்சள் -சிவப்பு நிறங்களில் விசிலை தயார் செய்யவும் பல நிர்வாகிகள் ஆர்டர் கொடுத்து விட்டனர். தற்பொழுது விஜய்க்கு விசில் சின்னம் கிடைத்த பின்னணி பற்றி ரகசிய தகவல் வெளியாகி இருக்கிறது.
தவெகவுக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி அதற்கான அறிவிப்பை ஜனவரி 22ஆம் தேதி வெளியிட்டது தேர்தல் ஆணையம். இந்த தேர்தலுக்கு மட்டும் தான் இந்த சின்னம். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிரந்தரமாக ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். அந்தச் சின்னம் வேறு கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பொதுவான சின்னத்தைப் பெற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அப்ப்போதுதான் அவர்கள் கேட்கும் சின்னம் கிடைக்கும். அந்த வகையில தவெக கடந்த வருடமே விசில் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து விட்டது.
ஒரு வேலை விசில் சின்னம் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலோ, டெல்லியில் பாஜக லாபி செய்து கிடைக்காமல் செய்தாலோ அதற்கு ஒரு மாற்று ஐடியாவை விஜய் வைத்திருக்கிறார். அப்படி விசில் சின்னம் கிடைக்கவில்லை என்றால் எப்படியாவது காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்கு இழுத்து வந்து அந்த கட்சியின் கைச்சின்னத்திலேயே தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விஜய் திட்டமிட்டு இருக்கிறார். விஜய் போட்டு வைத்திருந்த இந்த திட்டத்தை டெல்லி பாஜக தலைமை எப்படியோ மோப்பம் பிடித்து விட்டதாம். இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று பாஜக கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே.
அதேபோல வடமாநிலங்களில் கிட்டத்தட்ட காங்கிரஸை தோற்கடித்து வருகிறது. தமிழகத்தில் திமுகவுடன் ஒட்டிக்கொண்டு மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் தமிழகத்தில் கை சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்தால் அது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அட்வான்டேஜாக அமைந்துவிடும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் கருதுகிறது. இதை அடுத்து சத்தமில்லாமல் விசில் சின்னத்தை விஜய் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்போது காங்கிரஸ் கட்சி திமுகவுடன் இருந்தாலும் சீட்டு ஒதுக்கீடு செய்யும்போது தான் பிரச்சனைகள் எழ வாய்ப்பு இருக்கிறது. இதனால் அப்போது காங்கிரஸ் கட்சி விஜய் பக்கம் போனாலும் இனிமேல் தவெக விசில் சின்னத்தில் தான் போட்டியிட முடியும் என்பதால் பாஜக மேலிட தலைவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
