Thaipusam Kodiyetram Festival Flag Hoisting Spiritual : பழநி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நடைபெற்றது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடாக கருதப்படும் பழநி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அறுபடை வீடுகள் உட்பட அனைத்து முருகப் பெருமான் ஆலயங்களிலும் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்களுடன் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்படும் வைபவம் நடைபெற்று வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ் கடவுள் என்றாலே அது முருகன் தான் முருகனுக்கு தற்போது பக்தர்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றார்கள் என்றே கூறலாம். முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம் ஆடி கிருத்திகை சஷ்டி விரதம் பக்தர்களால் தற்போது மிகுந்த உணர்வுடன் கடைப்பிடித்து வருகின்றன வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தைப்பூசம் வருகின்றது. மாத பெளர்ணமியும், பூசம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில்தான் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.

அன்று முருகன் கோயிலில் மிகச் சிறப்பாக இருக்கும். தைபூசத் திருவிழா முருகனுக்கு உகந்ததாக கூறப்படுகிறது. அறுபடை கோயிலிலும், மற்ற முருகன் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் ஒவ்வொரு கோயில் வாரியாக 10 நாட்களோ அல்லது 12 நாட்களோ இந்த தைப் பூச திருவிழா கொண்டாடப்படும். இந்த தைப்பூச திருவிழா முன்னிட்டு கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் பெரியநாயகி அம்மன் கோயில் நடை திறக்கப்பட்டு வள்ளி தெய்வானை சமேதரான உற்சவர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷெக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருள செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

இதில், வேல், மயில் மற்றும் சேவல் உருவம் பொறித்த கொடியானது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதே போன்று கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள வீதி உலா நடைபெறுகிறது. மேலும், வரும் 31ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.