- Home
- Astrology
- This Week Rasi Palan: செவ்வாய் சூரியன் ஆடும் ஆட்டம்.! விருச்சிக ராசிக்கு நினைக்காத காரியங்கள் கூட நடக்கப்போகுது.!
This Week Rasi Palan: செவ்வாய் சூரியன் ஆடும் ஆட்டம்.! விருச்சிக ராசிக்கு நினைக்காத காரியங்கள் கூட நடக்கப்போகுது.!
This Week Rasi Palan Viruchigam: ஜனவரி 26 முதல் பிப்ரவரி 01 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

கிரக நிலைகள்:
விருச்சிக ராசி நேயர்களே, இந்த வாரம் மாற்றங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் சூரிய பகவானுடன் இணைந்து இருக்கிறார். சூரிய பகவான் விருச்சிக ராசியின் தொழில் ஸ்தானத்தின் அதிபதி என்பதால் இந்த வாரம் தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை நீங்கள் கேட்காமலேயே வந்து சேரும்.
பொதுவான பலன்கள்:
இந்த வாரம் மன நிறைவு தரும் வாரமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கும். சுப நிகழ்ச்சிகள் கைகூடிவரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கடன்களை படிப்படியாக அடைப்பதற்கான தீர்வுகளை காண்பீர்கள். சில விஷயங்களில் தடைகள் இருந்தாலும் விடாமுயற்சியால் வெற்றிகளைப் பெறுவீர்கள். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும்.
நிதி நிலைமை:
பணப்புழக்கம் சீராக இருக்கும். அதே வேளையில் செலவுகளும் கணிசமாக இருக்கலாம். கடன்களை தீர்ப்பதற்கான வழிகளை கண்டுபிடிப்பீர்கள். பொருளாதாரமும் மேம்படும். தாய் மற்றும் தந்தை வழியில் இருந்து ஆதரவு கிடைக்கலாம். உங்கள் பெயரிலோ அல்லது வாழ்க்கைத் துணையின் பெயரிலோ சொத்து வாங்கும் அளவிற்கு யோகம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறைந்து குடும்பத்தில் மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.
வேலை மற்றும் தொழில்:
வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலை இடத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு அனைத்தும் தானாக நடக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை முடித்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்களின் வரவால் லாபம் பெருகும்.
குடும்ப உறவுகள்:
குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சிறிது கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையலாம். வாக்குவாதத்தின் பொழுது தேவையற்ற வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டாம். மௌனம் காப்பது நல்லது. குழந்தைகளின் கல்வி அல்லது வேலை வாய்ப்பு தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கக் கூடும். தந்தை மற்றும் தாய் வழி மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கலாம். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் வாய்ப்புகளும் உண்டு.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
ஆரோக்கியத்தில் சிறு பிரச்சனைகள் தோன்றி மறையக்கூடும். குறிப்பாக சனி பகவானின் நிலை காரணமாக கால் வலி, மூட்டு வலி அல்லது செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் அதிக கட்டுப்பாட்டுடன் இருக்கவும். சரியான நேரத்திற்கு உறங்குவது மன அழுத்தத்தைக் குறைக்கும்.
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். கவனச் சிதறல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதிகாலை எழுந்து படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
சந்திராஷ்டம நாட்கள்:
இந்த வாரம் 29-01-2026 அன்று மாலை 6:39 மணி முதல் 31-01-2026 அன்று இரவு 8:01 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படவும். அவசர முடிவுகளை தவிர்க்கவும்.
பரிகாரங்கள்:
தினமும் காலையில் சூரிய பகவானை வழிபடுவது நல்லது. முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம். இயலாதவர்களுக்கு துவரம் பருப்பு அல்லது ஆடைகளை தானமாக வழங்கலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுண்டல் அல்லது எலுமிச்சை பழ சாதம் தானமாக வழங்குவது நன்மைகளைக் கூட்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

