- Home
- Sports
- Sports Cricket
- டி20 உலகக் கோப்பைக்கு கடப்பாரை டீமை களமிறக்கிய வெஸ்ட் இண்டீஸ்.. சிக்சர் மழைக்கு ரெடியா?
டி20 உலகக் கோப்பைக்கு கடப்பாரை டீமை களமிறக்கிய வெஸ்ட் இண்டீஸ்.. சிக்சர் மழைக்கு ரெடியா?
T20 World Cup 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்காக 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டி20 உலகக் கோப்பை 2026
இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான 15 பேர் கொண்ட வலுவான அணியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது. 2012 மற்றும் 2016 என
இரண்டு முறை டி20 உலகக் கோப்பை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மூத்த பேட்டர் ஷாய் ஹோப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
32 வயதான ஷாய் ஹோப், டிசம்பர் 2017-ல் நியூசிலாந்துக்கு எதிராக தனது டி20 போட்டியில் அறிமுகமானார். இந்த வலது கை பேட்டர் 58 போட்டிகளில் 56 இன்னிங்ஸ்களில் விளையாடி, 29.22 சராசரி மற்றும் 137.68 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1403 ரன்கள் எடுத்துள்ளார். ஹாய் ஹோப் டி20 வடிவத்தில் ஒன்பது அரை சதங்களையும் ஒரு சதத்தையும் அடித்துள்ளார்.ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சமீபத்திய டி20 தொடரைத் தவறவிட்ட ஹோப், மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
அதிரடி வீரர்கள் நிறைந்த அணி
மேலும், அணியை வலுப்படுத்தும் வகையில் ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோரும் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
மேலும் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் பலம்வாய்ந்த தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. டி20 உலகக் கோப்பையில் 'குரூப் சி'-யில் இடம்பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நேபாளம், இத்தாலி மற்றும் ஸ்காட்லாந்து அணிகளை எதிர்கொள்ளும்.
டி20 உலகக்கோப்பையில் முதல் போட்டி பிப்ரவரி 7 அன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸில் ஸ்காட்லாந்துக்கு எதிராக நடைபெறும்.
டி20 உலகக் கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணி முழு பட்டியல்:
ஷாய் ஹோப் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மயர், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், குடகேஷ் மோட்டி, ரோவ்மன் பவல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், குவென்டின் சாம்ப்சன், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட்

