வேண்டுதல் எங்கிருந்து வேண்டாலும் வைத்துக் கொள்ளலாம் ஆனால் நன்றி செலுத்துவதற்கு அம்மனிடம் வந்து சொல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது.
அம்மனின் வரலாறு: வன பத்திரகாளியம்மன் கோயில் பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்த இடத்தில் உருவானதாக கூறப்படுகிறது. மகிஷாசுரன் என்னும் அரக்கனை அழிக்க சிவபெருமானிடம் தவம் செய்ய இந்த வனப்பகுதிக்கு வனபத்ரகாளியம்மன் வந்ததாக கூறப்படுகிறது. இந்த வனத்தில் தான் அம்மன் தவம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்தக் கோயில் சூனிய கடவுள்களான ஆரவல்லி, சுரவல்லி கதைகளுடன் தொடர்புடையது என்றும் நம்பப்படுகிறது. பாண்டவ சகோதரர்களில் ஒருவரான பீமன் அவர்களின் தீய செயல்களை முடிவுக்கு கொண்டுவர இங்கு வந்தார். அவர்களால் மயங்கி கிருஷ்ணரால் மீக்கப்பட்டார். தீய சகோதரர்களை விரட்ட கிருஷ்ணரால் ஒரு அல்லிமுத்துவை நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வன பத்திரகாளியம்மிடம் பிரார்த்தனை செய்த பிறகு தான் அல்லிமுத்து தனது பணியை தொடங்கினார். அல்லிமுத்துவின் கர்ஜிக்கும் செயல்களை கண்டு ஆரவல்லியும் சூரவல்லியும் பயந்து நடுங்கி மிரண்டனர். அவர்கள் சரணடைந்து தங்கள் சகோதரியை அல்லி முத்துக்கு திருமணம் செய்து கொடுத்து உணவில் விஷம் வைத்துக் கொன்றனர். அர்ஜுனனின் மகன் அபிமன்யு மேல் உலகத்திற்கு சென்று அல்லி முத்துவை உயிருடன் பூமிக்கு கொண்டு வந்தான். இப்போது அல்லி முத்து இரட்டிப்பு வலிமை பெற்றவன். அதன் பிறகு வனபத்திர காளியம்மனை வேண்டிக்கொண்டு அவர் துணையுடன் ஆரவல்லி யையும் சூரவல்ளலியையும் கொன்றதாக கூறப்படுகிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள, மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோயில் மேற்கரை வனபத்ரகாளியம்மன் கோயில் ஆகும். இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காளி அம்மனுக்கு உகந்த செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். அம்மன் வனத்தில் அருள்பாலிக்கின்றார். நாம் நினைத்த காரியம் நிகழ்ந்தால் பெண்கள் தன் தாலியை கழற்றி அம்மனின் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பழக்கம் இந்த கோயிலுக்குஉண்டு . வேண்டுதல் எப்போது வேணாலும் வைத்துக் கொள்ளலாம் ஆனால் நன்றி செலுத்துவதற்கு இந்த கோயிலுக்கு வந்து சொன்னால்தான் அம்மன் ஏற்றுக்கொள்வதாக கூறப்படுகிறது.
ஆடுகளை பலி கொடுக்கும் முறை: வேண்டுதல் வைத்தாலோ அல்லது நினைத்த காரியம் நிறைபெற்றாலோ ஆடுகள் மற்றும் கோழிகளை இங்கு பலி கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. தனது காரியம் நடைபெறுவதற்கு பலி கொடுத்து விட்டு சென்றால் விரைவில் நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
நேத்திக்கடன்: கணவன் உடல் மீது ஏதேனும் பிரச்சனையும் இருந்தாலும், நமக்கு ஏதேனும் ஒரு வேண்டுதல் இருந்தாலும் வன பத்திரகாளி அம்மன் கோயிலில் தன் தாலியை கழட்டி கோயிலில் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறேன் என்று பெண்கள் வேண்டிக் கொள்வார்களாம். அந்த செயல் நடந்தாலும் பிரச்சனையில் இருந்து விடு பெற்றாலும் பெண்கள் அம்மனுக்கு தாலியை கழட்டி உண்டியல் செலுத்தும் நேர்த்திக்கடன் இந்த கோயிலில் இருந்து வருகிறது. நம் முதல் முதலில் தொடங்கும் தொழிலுக்கு இக்கோயிலில் வந்து பூ போட்டு பார்க்கும் முறை இங்கு உள்ளது என்று கூறப்படுகிறது. சிகப்பு பூ மற்றும் வெள்ளைப்பூ இரண்டையும் பேப்பர்களில் மடித்து அந்த அம்மன் முன்னாடி போட்டு அதனை எடுத்துப் பார்த்தால் அம்மன் உத்தரவு கொடுப்பதாக கூறப்படுகிறது.
நாம் நினைத்த தொழில் நிறைவு பெற்றால் அம்மனுக்கு புடவை சாத்துதல் எலுமிச்சம் மாலை சாத்துதல் போன்ற பழக்கமும் இங்கு இருந்து வருவதாக கூறப்படுகிறது. பகைவர்கள் நம் மீது ஏவப்பட்ட பில்லி சூனியம் எதனாலும் இக்கோவிலுக்கு வந்து சென்றால் விரைவில் அகலும் என்று கூறப்படுகிறது. குழந்தை வரம் வேண்டிய தம்பதியர்கள் இக்கோயிலுக்கு வந்து ஒரு சிகப்பு துணியில் ஒரு கல்லை வைத்து கட்டினால் விரைவில் குழந்தை பாக்கியம் அந்த அம்மனின் அருளால் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. நம் வேண்டுதல் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் ஆனால் நன்றி செலுத்துவதற்கு அம்மனின் முன் வந்தே நன்றி செலுத்த வேண்டும் என்று மிக முக்கியமாக கூறப்பட்டு வருகிறது.
