- Home
- Tamil Nadu News
- மக்களே குடை ரெடியா? சட்டென மாறிய வானிலை.. தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? முழு அப்டேட்!
மக்களே குடை ரெடியா? சட்டென மாறிய வானிலை.. தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? முழு அப்டேட்!
தமிழகத்தில் கடும் வெயில், பனிக்கு மத்தியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எந்தெந்த நாட்கள் மழை பெய்யும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் மழை பெய்யுமா?
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக இரவிலும், அதிகாலையிலும் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகலில் வெயில் கடுமையாக போட்டுத் தாக்கி வருகிறது. மழை பெய்யதா? வருண பகவான் கருணை காட்ட மாட்டாரா? என மக்கள் ஏங்கித் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரம் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
அதாவது 26ம் தேதி (இன்று) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27ம் தேதி (நாளை) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே வேளையில் தமிழகத்தின் மற்ற பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சில இடங்களில் மிதமான மழை பெய்யும்
28ம் தேதி முதல் 30ம் தேதி வரை தமிழகம், புதுவையில் வறண்ட வானிலை நிலவும் என்றும் 31ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இதேபோல் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை.
மக்கள் மகிழ்ச்சி
27ம் தேதி வரை 30ம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகவே மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

