MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஸ்டாலின் மட்டும் இதை கரெக்டா சொல்லிட்டார்னா நிர்வாணமாக நடக்க தயார்.. சவால் விடும் நாஞ்சில் சம்பத்

ஸ்டாலின் மட்டும் இதை கரெக்டா சொல்லிட்டார்னா நிர்வாணமாக நடக்க தயார்.. சவால் விடும் நாஞ்சில் சம்பத்

Nanjil Sampath: தவெக கட்சியை சில ஈனப்பயல்கள் தற்குறிகள் என்று சொல்லும் அனாதைகளுக்கு சொல்கிறேன் நாங்க ஆச்சரிய குறியாக மாறுவோம். திமுக மாநாட்டில் பத்தாயிரம் பேர் வடு இல்லை.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 11 2026, 11:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தவெக பொதுக்கூட்டம்
Image Credit : Asianet News

தவெக பொதுக்கூட்டம்

தமிழக வெற்றிக்கழக மகளிர் தின பொதுக்கூட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத்: திமுகவில் இருந்த போது கள்ளக்குறிச்சிக்கு விழுப்புரத்திற்கு விக்கிரவாண்டிக்கோ, திருக்கோவிலூருக்கோ வர செம்மண் திருடியவர்கள் அனுமதிக்கவில்லை. பெண்கள் சபிக்கப்பட்டவர்கள் பெண்கள் பிள்ளை பெறுபவர்களாகவும் போதையாக கருதுபவர்கள் இன்னும் உள்ளனர். உண்மையில் பெண்கள் வலிமை மிக்கவர்கள் திறமைமிக்கவர்கள் ஆணாதிக்க சமூகத்தில் பெண்களை அடிமை படுத்துவர்கள் இருந்து கொண்டு தான் உள்ளார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பாஜக பெண்களை மதிப்பதில்லை
Image Credit : Asianet News

பாஜக பெண்களை மதிப்பதில்லை

வர்த்தக சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், மகளிர் தினத்தை கொண்டாடுகிற தகுதி தவெகவிற்கு இருப்பது போல் வேறு எந்த இயக்கத்திற்கும் அரசியல் கட்சிக்கும் இல்லை. மகளிர் தினத்தினை திமுகவும் அதிமுகவும் கொண்டாடவில்லை பாஜக பெண்களை மதிப்பதில்லை நாங்கள் மதிக்கிறோம் என கூறினார். தவெக கட்சியை சில ஈனப்பயல்கள் தற்குறிகள் என்று சொல்லும் அனாதைகளுக்கு சொல்கிறேன் நாங்க ஆச்சரிய குறியாக மாறுவோம்.

35
தவெகவை பார்த்து திமுக காப்பி
Image Credit : Asianet News

தவெகவை பார்த்து திமுக காப்பி

திமுக மாநாட்டில் பத்து லட்சம் பேர் என கூறி பத்தாயிரம் பேர் மட்டுமே வரவழைக்கப்பட்டனர். மாநாட்டில் யாரையும் பேச விடாமல் முதல்வர் ஸ்டாலின் மட்டுமே 40 நிமிடம் பேசுகிறார். ரேம்ப் பாக் ஸ்டாலின் சென்றதை யாரும் விரும்பவில்லை. விக்கிரவாண்டியில் ரேம்ப் வாக்கை தொடங்கியவரே விஜய் தான். தவெக துண்டு போடுவதை பார்த்துதான் 75 ஆண்டுகள் வரலாறு கொண்ட திமுக துண்டு போடுகிறார்கள். ஸ்டாலினும் துண்டினை தூக்கி சுத்தலாமா என பார்க்கிறார்கள் தவெகவை பார்த்து திமுக காப்பி அடிப்பதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் என கூறமுடியாது என தெரிவித்தார்.

45
ஸ்டாலினுக்கு நாஞ்சில் சம்பத் சவால்
Image Credit : Asianet News

ஸ்டாலினுக்கு நாஞ்சில் சம்பத் சவால்

தவெக கூட்டணிக்கு பேச்சுவார்த்தைக்கு குழுவே அமைக்காத ஒரே கட்சியாக உள்ளதாகவும் நாங்கள் யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என கூறினார். திமுக கூட்டணியில் உள்ள 24 கட்சிகளின் பெயர்களை ஸ்டாலின் கூறினால் தான் நிர்வாணமாக நடக்க தயார். அதேபோல் திமுகவை அழிக்க பிறந்தவர் உதயநிதி ஸ்டாலின் சொல்லுவாரா என நாஞ்சில் சம்பத் சவால் விடுத்தார். தமிழகத்தில் ராசாயனம் மாற்றம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. பொற்கால ஆட்சி நடைபெறுவதாக தெரிவிக்கிறார்கள் அது அவர்களுக்கு தான் பொற்காலமாக உள்ளதாகவும் கோடி கோடியாக கொள்ளை அடித்து குவித்து வைச்சி இருக்காங்க என குற்றஞ்சாட்டினார்.

55
கொடநாடு கொலை கொள்ளை
Image Credit : Asianet News

கொடநாடு கொலை கொள்ளை

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்ய முதல்வர் தயங்குவதேன். திமுகவிற்கும் அதிமுகவிற்கும் கள்ள உறவு உள்ளது என்பதை காட்டுவதாகவும் பந்திக்கு முந்துபவர்கள் தவெகவினர் இல்லை படைக்கு முந்துபவர்கள் என தெரிவித்தார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திமுக
மு. க. ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
டிவி.கே. விஜய்
தமிழக வெற்றி கழகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மாநில அரசின் கொள்கைகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம்: சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
Recommended image2
Now Playing
விஜய் ஆட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை ! எடப்பாடி பேட்டி
Recommended image3
Now Playing
புதிய தமிழக தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி அதிரடி கேள்வி
Related Stories
Recommended image1
குடும்ப தலைவிகளுக்கு குட்நியூஸ்.! அக்கவுண்ட்டில் ரூ.5000 வரவு.! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Recommended image2
இனிமே தான் வெயிலின் ஆட்டமே இருக்காம்.. எச்சரித்த கையோடு மழை குறித்து எதிர்பாராத ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved