இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:18 AM (IST) Jan 19
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கர. இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் கைப்பற்றி உள்ள நிலையில், இதன் ரிலீஸ் தேதி இணையத்தில் கசிந்துள்ளது.
11:15 AM (IST) Jan 19
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலக் கெடுவை வருகின்ற 30ம் தேதி வரைக்கும் நீட்டிப்பு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நினைப்பவர்கள் கால நீட்டிப்பை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
11:11 AM (IST) Jan 19
டிஆர்பி-யில் முன்னணியில் இருக்கும் சன் டிவி, புதிய தொடர்கள் மற்றும் 'சிங்கப்பெண்ணே', 'மூன்று முடிச்சு' மெகா சங்கமம் போன்ற மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது. தற்போது லட்சுமி சீரியல் புதிய நேரத்தில் வரவுள்ளது.
10:46 AM (IST) Jan 19
Panchgrahi Rajyog Lucky Zodiac Signs: ஜனவரி மாத நடுப்பகுதியில் மகர ராசியில் பஞ்சகிரக யோகம் உருவாகிறது. ஐந்து கிரகங்களின் அபூர்வ சேர்க்கை சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்க இருக்கிறது.
10:41 AM (IST) Jan 19
பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன வா வாத்தியார், பராசக்தி மற்றும் தலைவர் தம்பி தலைமையில் ஆகிய மூன்று திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை பார்க்கலாம்.
10:39 AM (IST) Jan 19
வேலூர் மாவட்டத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. காட்பாடி, சத்துமதுரை, பள்ளூர், தக்கோலம், காந்திநகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படும்.
10:08 AM (IST) Jan 19
Gold Rate: தை மாதம் தொடங்கியதும் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து, சவரன் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ரூ.1,07,600 ஆகவும், வெள்ளி விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
09:44 AM (IST) Jan 19
விராட் கோலியின் புதிய சாதனைகள்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி மீண்டும் சதம் அடித்து அசத்தினார். இந்த போட்டியில் இந்திய அணி தோற்றாலும், கிங் கோலி 4 முக்கிய சாதனைகளைப் படைத்துள்ளார்.
09:42 AM (IST) Jan 19
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசி செய்த தில்லுமுல்லு வேலையை கண்டுபிடித்த ஜனனி, நீ நாளை ஜெயிலுக்கு போகப் போற என மிரட்டி உள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
09:37 AM (IST) Jan 19
பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ன் வெற்றியாளராக திவ்யா கணேஷ் அறிவிக்கப்பட்டார். வெற்றி மேடையில் கண்கலங்கிய அவர், திரைத்துறையில் தான் சந்தித்த தொடர் நிராகரிப்புகள் மற்றும் அவமானங்கள் குறித்தும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
09:24 AM (IST) Jan 19
பட்ஜெட் 2026-ல் சம்பளதாரர்கள் வருமான வரி சலுகைகளை எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆண்டு பட்ஜெட் 2025-ல் ரூ.12.75 லட்சம் வரை வரிவிலக்கு போன்ற முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.
08:57 AM (IST) Jan 19
காரைக்காலில் நடைபெற்ற மலர் கண்காட்சி மற்றும் கார்னிவல் விழாவைத் தொடர்ந்து, மாணவர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு இன்று ஒரு நாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளுக்கு இது பொருந்தாது.
08:55 AM (IST) Jan 19
கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இரண்டாவது முறையாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.
08:54 AM (IST) Jan 19
ஹோண்டா ஆக்டிவா 7G, புதிய ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட வசதிகளுடன் வரவுள்ளது. 110cc இன்ஜின், 55-60 கிமீ மைலேஜ், ஸ்மார்ட் கீ, டிஜிட்டல் கிளஸ்டர் போன்ற அம்சங்களுடன் வரவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
08:52 AM (IST) Jan 19
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவிடம் உதவி கேட்டும் செல்லும் ரோகிணிக்கு அவர் உதவ மறுத்துவிடுகிறார். இதனால் மீனாவையே மிரட்டி இருக்கிறார் ரோகிணி. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
08:46 AM (IST) Jan 19
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2-வில், தங்கமயிலின் வாழ்க்கை பெரும் சரிவை சந்தித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட அவர் விபரீத முடிவை நோக்கிச் செல்வது கதையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
08:21 AM (IST) Jan 19
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (20.01.2026) தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, விழுப்புரம், ஆவடி உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை வரை மின்தடை செய்யப்படும்.