- Home
- இந்தியா
- பாஜகவின் தேசிய தலைவரானார் 46 வயது இளம் தலைவர்.. பீகார் டூ டெல்லி.. யார் இந்த நிதின் நபின்?
பாஜகவின் தேசிய தலைவரானார் 46 வயது இளம் தலைவர்.. பீகார் டூ டெல்லி.. யார் இந்த நிதின் நபின்?
இந்தியாவின் பெரிய கட்சியான பாஜகவில் இமாலய பொறுப்பை ஏற்றுள்ள நிதின் நபின் இளம் வயதில் பாஜக தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மிக இளம் வயதிலேயே எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட இவர் இளம் வயதில் அமைச்சராக திறம்பட பணியாற்றியுள்ளார்

பாஜகவின் தேசிய தலைவரானார் நிதின் நபின்
பாஜகவின் தேசியத் தலைவராக 46 வயதான நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக தேசியத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் இன்று நடந்த நிலையில், நிதின் நபின் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால் அவர் போட்டியின்றி ஒருமனதாக பாஜகவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
நிதின் நபினுக்கு ஆதரவாக 37 செட் வேட்புமனுக்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக தேசியத் தலைவர் பதவிக்கு அவர் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் கே. லட்சுமணன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பாஜகவின் தேசிய தேர்தல் அதிகாரியான லட்சுமணன், 36 மாநிலங்களில் 30 மாநிலத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, கட்சியின் தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை தொடங்கப்பட்டது என்றார்.
போட்டியின்றி ஒருமனதாக தேர்வு
"36 மாநிலங்களில் 30 மாநிலத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பாஜக தேசியத் தலைவர் தேர்தல் செயல்முறை தொடங்கப்பட்டது, இது குறைந்தபட்சம் 50 சதவீத மாநிலங்களை நிறைவு செய்யத் தேவையான எண்ணிக்கையை விட அதிகமாகும்.
இப்போது, வேட்புமனு வாபஸ் பெறும் காலம் முடிந்த பிறகு, சங்கதன் பர்வ், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தேர்தல் அதிகாரி என்ற முறையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு நிதின் நபின் என்ற ஒரு பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளது என்பதை நான் இதன்மூலம் அறிவிக்கிறேன்" என்று லட்சுமணன் கூறியுள்ளார்.
யார் இந்த நிதின் நபின்?
இந்தியாவின் பெரிய கட்சியான பாஜகவில் இமாலய பொறுப்பை ஏற்றுள்ள நிதின் நபின் இளம் வயதில் பாஜக தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த நிதின் நபின், பாஜக தலைவராக இருந்த நவீன் கிஷோர் பிரசாத் சின்காவின் மகன் ஆவார். தந்தையின் மறைவுக்கு பிறகு பெரிய முகமாக மாறிய நிதின் நபின் பீகாரின் பாட்னா சாஹிப் சட்டப்பேரவை தொகுதியில் பலமுறை வெற்றி கண்டார்.
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் நம்பிக்கைக்குரியவர்
மிக இளம் வயதிலேயே எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட இவர் இளம் வயதில் அமைச்சராக திறம்பட பணியாற்றியுள்ளார். சத்தீஸ்கர் மாநில பாஜகவின் பொறுப்பாளராக இருந்த நிதின் நபின் பீகாரில் காங்கிரசை வீழ்த்தி பாஜக அமோக வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார். இதன்மூலம் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் நம்பிக்கைக்குரியவராக மாறிய நிதின் நபினுக்கு பெரும் பதவி பரிசாக கிடைத்துள்ளது.

