- Home
- Sports
- Sports Cricket
- IND vs NZ: இது வேலைக்கு ஆகாது.. இந்திய அணியை வறுத்தெடுத்த ஜாம்பவான். கடும் விமர்சனம்!
IND vs NZ: இது வேலைக்கு ஆகாது.. இந்திய அணியை வறுத்தெடுத்த ஜாம்பவான். கடும் விமர்சனம்!
முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, டேரில் மிட்செல், ஜெய்டன் லெனாக்ஸ், கிளென் பிலிப்ஸ் மற்றும் கிறிஸ்டியன் கிளார்க் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், நியூசிலாந்து அணி மீண்டு வந்து மற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி வரலாற்று சாதனை
இந்தூரில் நேற்று நடந்த இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்று இந்திய மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை வென்றது.
முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, டேரில் மிட்செல், ஜெய்டன் லெனாக்ஸ், கிளென் பிலிப்ஸ் மற்றும் கிறிஸ்டியன் கிளார்க் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், நியூசிலாந்து அணி மீண்டு வந்து மற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம்
1988-க்குப் பிறகு முதல் முறையாக, நியூசிலாந்து அணி இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை இழந்ததைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணியின் சவால்களுக்கு இந்தியாவின் பதில் நடவடிக்கை சற்று மந்தமாக இருந்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். நியூசிலாந்து அணி இந்தத் தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் மந்தமான ஆட்டம்
இது தொடர்பாக பேசிய அஸ்வின், ''இந்தியா தனது பி அல்லது சி அணிகளை வைத்து விளையாடினால்கூட, மற்ற அணிகளை வீழ்த்த முடியும் என்று நான் நினைத்தேன். இது அணியின் தரத்துடன் தொடர்புடையது அல்ல என்பதால் நான் இப்போது கொஞ்சம் கவலைப்படுகிறேன்.
வெளியில் இருந்து பார்க்கும்போது, இந்திய அணியின் பதில் சற்று மந்தமாக இருந்ததாக நான் நினைக்கிறேன். அந்த பதில் இல்லை. எப்போதும், அணி அழுத்தத்திற்கு உள்ளாகும் போது, இந்திய அணி கடந்த காலங்களில் வழிகளைக் கண்டுபிடித்து அந்தப் பழக்கத்தைக் காட்டியுள்ளது.
நியூசிலாந்துக்கு முழுமையான வெற்றி
ஆனால் இப்போது மந்தமாக இருந்தது ஏமாற்றமளித்தது. நாம் அவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினோம் என்று நான் நினைக்கவில்லை. நாம் மிகவும் மென்மையான கிரிக்கெட்டை விளையாடினோம். என் பார்வையில், நியூசிலாந்து இந்தத் தொடரை 5-0 என வென்றுள்ளது. அவர்கள் இரண்டில் வென்றாலும், இன்னொன்றையும் வெல்லும் அளவுக்கு அச்சுறுத்தினர். எனவே இது ஒரு முழுமையான வெற்றி'' என்று தெரிவித்துள்ளார்.

