- Home
- Sports
- Sports Cricket
- IND vs NZ: கடைசி வரை போராடிய 'கிங்' கோலி.. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி வரலாற்று சாதனை! மாஸ்!
IND vs NZ: கடைசி வரை போராடிய 'கிங்' கோலி.. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி வரலாற்று சாதனை! மாஸ்!
ஹர்சித் ராணாவும், கோலியும் அதிரடியாக ரன்கள் சேர்த்ததால் நம்பிக்கை பிறந்தது. ஹர்சித் ராணா அதிரடியாக பவுண்டரியும், சிக்சருமாக நொறுக்கினார். சூப்பராக விளையாடிய ஹர்ஷித் 43 பந்துகளில் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்து அணி வெற்றி
இந்தூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. மேலும் இந்த தொடரை 2 1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய மண்ணில் முதல் ஓடிஐ தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 338 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.
டேரில் மிட்ச்செல், கிளைன் பிலிப்ஸ் சூப்பர் சதம்
கிளைன் பிலிப்ஸ், டேரில் மிச்செல் சூப்பர் சதம் விளாசினார்கள். பிலிப்ஸ் 88 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 106 ரன்கள் எடுத்தார். டேரில் மிட்ச்செல் 131 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 137 ரன்கள் எடுத்து அசத்தினார். பின்பு விளையாடிய இந்திய அணி 46 ஓவரில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ரோகித் சர்மா ஏமாற்றம்
இந்திய அணியில் ரோகித் சர்மா (11), கேப்டன் சுப்மன் கில் (23), ஷ்ரேயாஸ் ஐயர் (3), கே.எல்.ராகுல் (1) சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். ஒரு கட்டத்தில் இந்தியா 71/4 என பரிதவித்தது. ஆனால் கிரிக்கெட்டின் கிங், விராட் கோலியும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நன்றாக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி 57 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆவுட் ஆனார். ரவீந்திர ஜடேஜாவும் 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
விராட் கோலி சதம்; ஹர்சித் ராணா அதிரடி
பின்பு ஹர்சித் ராணாவும், கோலியும் அதிரடியாக ரன்கள் சேர்த்ததால் நம்பிக்கை பிறந்தது. ஹர்சித் ராணா அதிரடியாக பவுண்டரியும், சிக்சருமாக நொறுக்கினார். சூப்பராக விளையாடிய ஹர்ஷித் 43 பந்துகளில் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மறுபக்கம் விராட் கோலி அட்டகாசமாக விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 85வது சதம் விளாசினார். தனியொருவனாக போராடிய விராட் கோலி 108 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து அணி வரலாற்று சாதனை
இதன்பின்பு இந்தியாவின் நம்பிக்கை தகர்ந்தது. கடைசியில் சிராஜ் (0), குல்தீப் யாதவ் (5) விரைவில் அவுட் ஆனதால் இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய மண்ணில் முதல் ஓடிஐ தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த போட்டியில் சதம் விளாசியதால் ஆட்டநாயகன் விருதையும், தொடரில் 2 சதத்துடன் 352 ரன்கள் குவித்ததால் தொடர் நாயகன் விருதையும் டேரில் மிச்செல் வென்றார்.

