MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs SA Super 8.. இந்தியா பிளேயிங் லெவன்.. அபிஷேக் சர்மாவுக்கு சான்ஸ்.. ஆல்ரவுண்டர் நீக்கம்!

IND vs SA Super 8.. இந்தியா பிளேயிங் லெவன்.. அபிஷேக் சர்மாவுக்கு சான்ஸ்.. ஆல்ரவுண்டர் நீக்கம்!

டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டிக்கான இந்திய அணியில் அபிஷேக் சர்மாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Feb 20 2026, 07:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்தியா vs தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 போட்டி
Image Credit : Getty

இந்தியா vs தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 போட்டி

டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நாளை (பிப்ரவரி 21) நடைபெற உள்ளன. இந்திய அணி சூப்பர் 8 சுற்று போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் 22ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மோதுகிறது. இந்த போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வாஷிங்டன் சுந்தர் நீக்கம்
Image Credit : X/Sundarwashi5

வாஷிங்டன் சுந்தர் நீக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் அக்சர் படேலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறார். நெதர்லாந்துக்கு எதிராக விளையாடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்படுகிறார்.

அபிஷேக் சர்மாவுக்கு சான்ஸ்

அதே வேளையில் அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து என தான் விளையாடிய 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் டக் அவுட்டான அபிஷேக் சர்மாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அபிஷேக் சர்மா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறார். ஆகையால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை.

34
கம்பீரின் நம்பிக்கையை பெற்ற அபிஷேக் சர்மா
Image Credit : Getty

கம்பீரின் நம்பிக்கையை பெற்ற அபிஷேக் சர்மா

அபிஷேக் சர்மாவை பொறுத்தவரை டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக மிகவும் ஆபத்தான வீரராக விளங்கினார். நியூசிலாந்து எதிராக மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறிய நேரத்திலும் தனி ஆளாக அணியை வெற்றி பெற வைத்தார். 

ஆகையால் அபிஷேக் சர்மா மீண்டும் பார்முக்கு திரும்பி வருவார் என இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நம்புகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அபிஷேக் சர்மா சொதப்பினால் தான் அவரை வெளியே உட்கார வைக்க கம்பீர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

44
இந்திய அணி பிளேயிங் லெவன்
Image Credit : Team India\BCCI

இந்திய அணி பிளேயிங் லெவன்

எனவே அக்சர் படேல் மாற்றத்தை தவிர இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வேறு எந்த மாற்றம்மும் இருக்காது என எதிபார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
டாஸ் வென்றும் இந்தியாவுக்கு பேரிடி! ஹோப்பின் சதம், சாம்சனின் போராட்டம்... தோல்விக்கான 3 காரணங்கள்!
Recommended image2
டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் வெள்ளை டிரஸ் ஏன்? இந்த சுவாரஸ்யமான வரலாறு தெரியுமா?
Recommended image3
IND vs WI 4th T20: 2 அதிரடி மாற்றம்.. வைபவ் சூர்யவன்ஷி கம்பேக்.. சிக்சர் மன்னனுக்கு இடமில்லை.. பிளேயிங் லெவன்!
Related Stories
Recommended image1
அபிஷேக் சர்மா இதை செய்யாவிட்டால் SA போட்டியிலும் 'டக்' தான்.. ஆருடம் சொன்ன ஜாம்பவான்!
Recommended image2
0,0,0.. அபிஷேக் சர்மா ஹாட்ரிக் 'டக்' அவுட்.. ஒரு ரன் கூட அடிக்கல.. மிகப்பெரிய பலவீனம் அம்பலம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved