MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • காதல் மனைவியை பிரிந்தார் சிஎஸ்கே வீரர்.. வாழ்க்கை சொன்ன பாடம்.. உருக்கமான பதிவு!

காதல் மனைவியை பிரிந்தார் சிஎஸ்கே வீரர்.. வாழ்க்கை சொன்ன பாடம்.. உருக்கமான பதிவு!

ராகுல் சாஹரும், பேஷன் டிசைனரான இஷானி ஜோஹரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் கோவாவில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின்போது ராகுல் சாஹரின் வயது 22.

2 Min read
Author : Rayar r
Published : Feb 20 2026, 09:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மனைவியை விவாகரத்து செய்தார் ராகுல் சாஹர்
Image Credit : x

மனைவியை விவாகரத்து செய்தார் ராகுல் சாஹர்

இந்திய அணி வீரரும், ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி வீரருமான ராகுல் சாஹர் தனது மனைவி இஷானி ஜோஹரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ராகுல் சாஹர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''நான் மிக இளம் வயதிலேயே திருமண வாழ்க்கையில் நுழைந்தேன். அப்போது என்னைப் பற்றியோ, நான் உருவாக்க விரும்பிய வாழ்க்கையைப் பற்றியோ எனக்கு முழுமையான புரிதல் இருக்கவில்லை. அதன் விளைவாக நான் எதிர்பார்க்காத பல பாடங்களை வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டேன்.

அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வருகிறது

கடந்த 15 மாதங்களாக நீதிமன்ற அறைகளில் பொறுமையையும், மீண்டு வரும் திறனையும், உண்மையின் மூலம் கிடைக்கும் வலிமையையும் கற்றுக்கொண்டேன். இன்று, என் வாழ்க்கையின் அந்த அத்தியாயம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வருகிறது. முறையான சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு, பெரும் விலைகொடுத்து இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

23
பாடம் கற்றுக் கொண்டேன்
Image Credit : ANI

பாடம் கற்றுக் கொண்டேன்

இந்த அத்தியாயத்தை நான் கோபத்துடனோ அல்லது வருத்தத்துடனோ முடிப்பதில்லை; மாறாக மிகுந்த தெளிவுடன் முடிக்கிறேன். சில உறவுகள் வாழ்நாள் முழுவதும் நீடிப்பதற்காக அமைவதில்லை; அவை நம்மை விழிப்படையச் செய்யவும், பாடம் கற்பிக்கவும், நம்மை உருமாற்றவுமே அமைகின்றன. நான் இப்போது அதிக ஞானத்துடனும், சுய விழிப்புணர்வுடனும், நான் வாழத் தகுதியான வாழ்க்கையை உருவாக்குவதில் உறுதியுடனும் முன்னேறிச் செல்கிறேன்.

இது ஒரு முடிவல்ல; விடுதலை

இது ஒரு முடிவல்ல, இது ஒரு விடுதலை; ஒரு புதிய தொடக்கம். இனி நான் உருவாக்கும் அனைத்தும் சுயமரியாதை, அமைதி மற்றும் சிறந்த தேர்வுகளின் அடிப்படையில் அமையும் என்ற உறுதிமொழி இது. என்னுடன் நான் எந்தக் கசப்பையும் சுமந்து செல்லவில்லை, பாடங்களையும், கண்ணியத்தையும், மீண்டும் தொடங்குவதற்கான தைரியத்தையும் மட்டுமே எடுத்துச் செல்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Related image1
IND vs SA Super 8.. இந்தியா பிளேயிங் லெவன்.. அபிஷேக் சர்மாவுக்கு சான்ஸ்.. ஆல்ரவுண்டர் நீக்கம்!
Related image2
SA A vs IND A அம்பயர் அவுட் கொடுக்காத ஆத்திரத்தில் கண்ணாடியை கழட்டிஎறிந்த ராகுல் சாஹர்! அம்பயருடன் வாக்குவாதம்
33
சிஎஸ்கேவுக்காக விளையாடும் ராகுல் சாஹர்
Image Credit : our own

சிஎஸ்கேவுக்காக விளையாடும் ராகுல் சாஹர்

ராகுல் சாஹரும், பேஷன் டிசைனரான இஷானி ஜோஹரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் கோவாவில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின்போது ராகுல் சாஹரின் வயது 22. பல கனவுகளுடன் இருவரும் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த நிலையில், இப்போது அந்த கனவே கலைந்துள்ளது. 

இந்திய அணிக்காக விளையாடியுள்ள ராகுல் சாஹரை சிஎஸ்கே அணி ஐபிஎல் 20206ல் 5.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியுள்ளது. இல்லற வாழ்க்கை முடிவுக்கு வந்தாலும், கிரிக்கெட் வாழ்க்கையில் ராகுல் சாஹல் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
டி20 உலகக் கோப்பை
சிஎஸ்கே

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SA Super 8.. இந்தியா பிளேயிங் லெவன்.. அபிஷேக் சர்மாவுக்கு சான்ஸ்.. ஆல்ரவுண்டர் நீக்கம்!
Recommended image2
அபிஷேக் சர்மா இதை செய்யாவிட்டால் SA போட்டியிலும் 'டக்' தான்.. ஆருடம் சொன்ன ஜாம்பவான்!
Recommended image3
T20 WC: ஆஸ்திரேலியா மட்டுமல்ல; இலங்கையையும் கதற விட்ட ஜிம்பாப்வே.. அடுத்து இந்தியாவா?
Related Stories
Recommended image1
IND vs SA Super 8.. இந்தியா பிளேயிங் லெவன்.. அபிஷேக் சர்மாவுக்கு சான்ஸ்.. ஆல்ரவுண்டர் நீக்கம்!
Recommended image2
SA A vs IND A அம்பயர் அவுட் கொடுக்காத ஆத்திரத்தில் கண்ணாடியை கழட்டிஎறிந்த ராகுல் சாஹர்! அம்பயருடன் வாக்குவாதம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved