29வது ஓவர் முடிவில் நியூசிலாந்து 150 ரன்களைக் கடந்தது. 33வது ஓவரில், கிளென் பிலிப்ஸ் தனது ஆறாவது ஒருநாள் அரைசதத்தை நிறைவு செய்தார். இந்தியாவுக்கு எதிரான 10 ஒருநாள் இன்னிங்ஸ்களில் கிளென் பிலிப்ஸ் அடித்த முதல் 50+ ஸ்கோர் இதுவாகும்.
இந்தூரில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸின் அபாரமான சதங்களின் உதவியுடன், நியூசிலாந்து அணி 338 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு ஆரம்பம் சரியாக அமையவில்லை. வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், முதல் ஓவரின் நான்காவது பந்தில் தொடக்க வீரர் ஹென்றி நிக்கோல்ஸை கோல்டன் டக் அவுட் ஆக்கினார்.
டேரில் மிட்ச்செல், கிளைன் பிலிப்ஸ் அதிரடி
அடுத்த ஓவரிலேயே, வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா, டெவோன் கான்வேயை (5) ஆட்டமிழக்கச் செய்தார். வில் யங் 30 ரன்கள் அடித்து அவுட் ஆனார். நியூசிலாந்து அணி 58/3 என தடுமாறிய நிலையில், டேரில் மிட்ச்செல்லும், கிளைன் பிலிப்புஸும் அட்டகாசமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். தனது சிறப்பான ஃபார்மைத் தொடர்ந்த மிட்செல், 21வது ஓவரின் கடைசிப் பந்தில் இந்தத் தொடரில் மற்றொரு அரைசதத்தை அடித்தார்.
இருவரும் சதம்
29வது ஓவர் முடிவில் நியூசிலாந்து 150 ரன்களைக் கடந்தது. 33வது ஓவரில், கிளென் பிலிப்ஸ் தனது ஆறாவது ஒருநாள் அரைசதத்தை நிறைவு செய்தார். இந்தியாவுக்கு எதிரான 10 ஒருநாள் இன்னிங்ஸ்களில் கிளென் பிலிப்ஸ் அடித்த முதல் 50+ ஸ்கோர் இதுவாகும்.தொடர்ந்து 36வது ஓவரின் நான்காவது பந்தில், டேரில் மிட்செல் 106 பந்துகளில் தனது ஒன்பதாவது ஒருநாள் சதத்தை விளாசினார். இது கடந்த நான்கு இன்னிங்ஸ்களில் மிட்செல் அடித்த மூன்றாவது ஒருநாள் சதமாகும்.
219 ரன்கள் பார்ட்னர்ஷிப்
42வது ஓவரின் கடைசிப் பந்தில், கிளென் பிலிப்ஸ் 83 பந்துகளில் தனது இரண்டாவது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார். 44வது ஓவரின் முதல் பந்தில் பிலிப்ஸை ஆட்டமிழக்கச் செய்த அர்ஷ்தீப் சிங், பிரம்மாண்டமான 219 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை முடிவுக்குக் கொண்டுவந்தார். பிலிப்ஸ் 88 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 106 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன்பிறகு டேரில் மிட்ச்செல் 131 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 137 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட்
இறுதியில் நியூசிலாந்து கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 18 பந்துகளில் நான்கு பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 28 ரன்கள் எடுக்க அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 337 ரன்கள் குவித்தது.இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 338 என்ர சவாலான இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்கிறது.


