- Home
- Sports
- Sports Cricket
- IND vs NZ: ஆல்ரவுண்டருக்கு மீண்டும் சான்ஸ்.. ருத்ராஜை விட இவர் திறமைசாலியா? விளாசும் நெட்டிசன்கள்!
IND vs NZ: ஆல்ரவுண்டருக்கு மீண்டும் சான்ஸ்.. ருத்ராஜை விட இவர் திறமைசாலியா? விளாசும் நெட்டிசன்கள்!
இந்த போட்டியில் வென்று இந்தியாவில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைக்கும் நோக்கில் நியூசிலாந்து உள்ளது. அதேவேளையில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரை இதுவரை இழந்ததில்லை என்ற சாதனையை தக்கவைக்க இந்தியா போராடும்.

இந்தியா, நியூசிலாந்து 3வது ஓடிஐ
இந்தூரில் நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்து வருகிறது. கடந்த போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. எதிர்பார்த்தபடி வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நிதிஷ்குமார் ரெட்டிக்கு மீண்டும் வாய்ப்பு
அதே வேளையில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சொதப்பி வரும் நிதிஷ் குமார் ரெட்டிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திறமையான வீரர்கள் பலர் இந்திய அணியின் கதவை தட்டிக் கொண்டிருக்கும் நிலையில், நிதிஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு பிசிசிஐக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சதம் விளாசிய ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு இடம் கொடுக்காமல் நிதிஷ் குமார் ரெட்டியை சேர்த்தது ஏன்? என ரசிகர்கள் பொங்கி வருகின்றனர்.
இந்தியா சிறப்பான பவுலிங்
3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணி இப்போது வரை 19 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. டேவான் கான்வே (5), ஹென்ரி நிக்கோலஸ் (0) விரைவில் அவுட் ஆனார்கள். வில் யங் 30 ரன்கள் அடித்தார். ஹர்சித் ராணா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியில் வென்று இந்தியாவில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைக்கும் நோக்கில் நியூசிலாந்து உள்ளது. அதேவேளையில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரை இதுவரை இழந்ததில்லை என்ற சாதனையை தக்கவைக்க இந்தியா போராடும்.
இந்திய அணி பிளேயிங் லெவன்
3வது ஓடிஐயில் இந்திய அணி பிளேயிங் லெவன்: சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ்.

