- Home
- Tamil Nadu News
- தமிழக அரசு பேருந்தில் இந்தி பெயர் பலகை.. பொங்கியெழுந்த தமிழ் ஆர்வலர்கள்.. முழு விவரம்!
தமிழக அரசு பேருந்தில் இந்தி பெயர் பலகை.. பொங்கியெழுந்த தமிழ் ஆர்வலர்கள்.. முழு விவரம்!
இந்தி எதிர்ப்பை முன்வைத்து தமிழகத்தில் ஆட்சியை பிடித்த திமுக இந்தி எதிர்ப்பை தொடர்ந்து விடாமல் பிடித்து வருகிறது. முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முதற்கொண்டு திமுகவின் அனைத்து தலைவர்களும் இந்தி திணிப்பு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.

தமிழக அரசு பேருந்தில் இந்தி எழுத்து
தஞ்சாவூரில் இயக்கப்பட்ட ஒரு அரசு பேருந்தில் உள்ளே பொருத்தப்பட்ட மின்னணு பெயர் பலகையில் welcome என ஆங்கிலத்தில் குறிப்பிடுவதற்கு பதிலாக இந்தி மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின. புதிதாக அறிமுகமான பேருந்துகளில் உட்பக்கம் பொருத்தப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டுகளில் வெல்கம் என ஆங்கிலத்திலும், தமிழில் நல்வரவு எனவும் குறிப்பிடப்படும்.
தமிழ் ஆர்வலர்கள் எதிர்ச்சி
ஆனால் சம்பந்தப்பட்ட அரசு பேருந்தில் தமிழ், ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தி மொழியில் வெல்கம் என குறிப்பிடப்பட்டு இருந்தது பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுப் பேருந்துகளில் இந்தி எதற்கு? என தமிழ் ஆர்வலர்கள் பொங்கியெழுந்தனர்.
சில அரசு பேருந்துகளில் LED பலகையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சீன மொழியில் எழுத்துகள் தோன்றின. அதேபோல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தி எழுத்துகள் தோன்றியதாக போக்குவரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்தி திணிப்புக்கு திமுக எதிர்ப்பு
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மத்திய பாஜக அரசு தேசிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு வழிகள் வாயிலாக இந்தி மொழியை தமிழ்நாட்டில் திணிக்க முயல்வதாக குற்றம்சாட்டி வருகிறது.
இந்தி எதிர்ப்பை முன்வைத்து தமிழகத்தில் ஆட்சியை பிடித்த திமுக இந்தி எதிர்ப்பை தொடர்ந்து விடாமல் பிடித்து வருகிறது. முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முதற்கொண்டு திமுகவின் அனைத்து தலைவர்களும் இந்தி திணிப்பு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.
எப்படி கவனிக்காமல் விட்டனர்?
மத்திய அரசு இந்தியை திணிப்பதாக கூறி திமுகவினர் சிலர் பாளையங்கோட்டை ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் இந்தி எழுத்துகளை அழித்தது சர்ச்சையானது.
இப்படியாக திமுக அரசும், திமுகவினரும் இந்திக்கு எதிராக நிற்க, அரசு பேருந்தில் இந்தி எழுத்து தோன்றியதை எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்? சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர், போக்குவரத்து அதிகாரிகள் இதை எப்படி கவனிக்காமல் விட்டனர்? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

