MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆத்தாடி.. வெயில் இப்படி பொளக்குதே.. மழைக்கும் வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!

ஆத்தாடி.. வெயில் இப்படி பொளக்குதே.. மழைக்கும் வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!

தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எங்கெங்கு மழை பெய்யும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar r
Published : Mar 01 2026, 10:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சில இடங்களில் மட்டும் மழை
Image Credit : Asianet News

சில இடங்களில் மட்டும் மழை

தமிழகம் கோடை காலத்தின் தொடக்கத்தில் உள்ள நிலையில், இப்போதே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது. சென்னை முதல் பல்வேறு மாவட்டங்களில் வெயில் போட்டுத்தாக்கி வருகிறது. சில இடங்களில் எப்போதாவது மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவியது.

24
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Image Credit : Asianet News

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்த நிலையில், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைக்குதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது சென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது மார்ச் 2ம் தேதி (நாளை) முதல் மார்ச் 3ம் தேதி வரை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

Related Articles

Related image1
வெதர்மேன் சொன்ன மாதிரியே வெளுத்து வாங்கிய மழை.. மகிழ்ச்சியில் விவசாயிகள் பொதுமக்கள்!
Related image2
மழை வருமா? வெயில் சுட்டெரிக்கப் போகுதா? வானிலை மையம் லேட்டஸ் அப்டேட்
34
மற்ற இடங்களில் மழை பெய்யுமா?
Image Credit : Asianet News

மற்ற இடங்களில் மழை பெய்யுமா?

மார்ச் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

மார்ச் 7ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

44
சென்னையில் எப்படி?
Image Credit : Google

சென்னையில் எப்படி?

மேலும் மார்ச் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து, இயல்பை விட 2-3° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 சென்னையை பொறுத்தவரை நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கனமழை
வானிலை அறிக்கை
வானிலை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழகத்தில் NDA ஆட்சி உறுதி.. திமுக கொள்ளை கும்பல் தூக்கியெறியப்படும்.. மதுரையில் கர்ஜித்த பிரதமர் மோடி!
Recommended image2
திருப்பரங்குன்றத்தில் பிரதமர் தரிசனம்.. வேட்டி, சட்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து முருக பக்தராய் மாறிய மோடி!
Recommended image3
தமிழகத்துக்கு 9 மடங்கு அதிக நிதி.. மதுரையில் திமுக அமைச்சர் முன்பு லிஸ்ட் போட்ட பிரதமர் மோடி!
Related Stories
Recommended image1
வெதர்மேன் சொன்ன மாதிரியே வெளுத்து வாங்கிய மழை.. மகிழ்ச்சியில் விவசாயிகள் பொதுமக்கள்!
Recommended image2
மழை வருமா? வெயில் சுட்டெரிக்கப் போகுதா? வானிலை மையம் லேட்டஸ் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved