- Home
- Astrology
- கேதுவின் கோரப் பார்வை: இந்த 3 ராசிகளுக்கும் இனி சோதனையான காலம்! கஷ்ட நஷ்டங்களை தவிர்ப்பது எப்படி?
கேதுவின் கோரப் பார்வை: இந்த 3 ராசிகளுக்கும் இனி சோதனையான காலம்! கஷ்ட நஷ்டங்களை தவிர்ப்பது எப்படி?
Kethu Peyarchi difficult time for 3 Zodiac Signs: கேது தனது நட்சத்திரத்தை மாற்றும் நிலையில் இந்த நட்சத்திர மாற்றம் 3 ராசிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. அதைப் பற்றி பார்க்கலாம்.

கேதுவின் நட்சத்திர மாற்றம்
கேதுவின் நட்சத்திர மாற்றமானது வரும் ஜனவரி 25ஆம் தேதி நிகழ்கிறது. அதாவது, கேது பூரம் நட்சத்திரத்தின் 2ஆவது கட்டத்திலிருந்து முதல் கட்டத்திற்கு பெயர்ச்சியாகிறது. தனது நட்சத்திற்குள் பெயர்ச்சியாகும் நிலையில் இந்த நட்சத்திர பகுதி மாற்றமானது வரும் மார்ச் 29ஆம் தேதி வரையில் கிட்டத்தட்ட 65 நாட்கள் நீடிக்கிறது. கேது பகவானின் இந்த நட்சத்திர மாற்றமானது 3 ராசிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. அந்த ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.
மிதுன ராசி
கேது நட்சத்திர மாற்றத்தால் முதலில் பாதிக்கப்படுவது மிதுன ராசியினர் தான். என்னதான் கடினமாக ஓடி ஓடி உழைத்தாலும் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைப்பதில் தடை, தாமதம் உண்டாகும். வீட்டில் கணவன் மனைவிக்கிடையில் அடிக்கடி மனக்கசப்புகள் வரலாம். கணவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் நிலை உருவாகும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படக் கூடும். மொத்தத்தில் மிதுன ராசியினர் இந்த 60 நாட்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
துலாம் ராசி
கேதுவின் தாக்கத்தால் பாதிக்கப்படும் ராசிகளின் பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பது துலாம் ராசி தான். பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படக் கூடும். பண விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மாட்டிக்கொள்ளும் சூழல் உருவாகும். கடினமாக உழைக்க வேண்டி வரும். ஒரு சிலருக்கு மன அழுத்தம் ஏற்படக் கூடும். மேலும், மருத்துவ செலவுகள் உள்பட வீண் விரைய செலவுகள் ஏற்படக் கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம் ராசி
கேதுவின் தாக்கத்தால் பாதிக்கப்படும் ராசிகளில் கடைசி இடத்தில் இருப்பது மீனம் ராசி. இந்த நேரத்தில் வேலையை ராஜினாமா செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். புதிய வேலை கிடைத்த பிறகு அதைப் பற்றி யோசிப்பது நன்மை அளிக்கும். ஏழரை சனியின் காலகட்டம் என்பதால் எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.