- Home
- Tamil Nadu News
- எமனாக மாறிய பலூன் கேஸ் சிலிண்டர்.. உடல் சிதறி 3 பேர் பலி.. கதறிய கள்ளக்குறிச்சி.. என்ன நடந்தது?
எமனாக மாறிய பலூன் கேஸ் சிலிண்டர்.. உடல் சிதறி 3 பேர் பலி.. கதறிய கள்ளக்குறிச்சி.. என்ன நடந்தது?
கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டையில் பலூன்களுக்கு காற்று நிரப்பும் கேஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் எப்படி நடந்தது? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

பலூன் கேஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் பலூன்களுக்கு காற்று நிரப்பும் கேஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மணலூர்பேட்டையில் ஆற்று திருவிழாவின்போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் பலியானதுடன், மேலும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து எப்படி நடந்தது?
மணலூர்பேட்டையில் ஆற்று திருவிழாவுக்காக ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. குழந்தைகளுக்கு பிடித்தமான பலூன் கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த பலூன்களுக்கு காற்று நிரப்புவதற்காக கேஸ் சிலிண்டர் கொண்டு வரப்பட்டு இருந்த நிலையில், அந்த சிலிண்டர் தான் வெடித்து சிதறியது. இந்த விபத்து எப்படி நடந்தது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

