திமுகவில் நழுவும் பிடி..! திட்டம்போடும் கனிமொழி..! மட்டம் தட்டும் திமுக தலைமை..!
தன்னோட விருப்பத்தை கட்சி தலைமையிடம் சொல்லியும் எந்தவித பதிலும் இல்லை என்ற நிலையிலும் தனது முடிவில கனிமொழி உறுதியாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கனிமொழி தொடர்ந்து திமுகவின் முக்கிய துணைப் பொதுச் செயலாளராகவும், நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் குழுத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
டெல்லி அரசியலில் கனிமொழியை முன்னிலைப்படுத்தி கட்சியிலும் பெரிய பொறுப்புகளை கொடுத்த திமுக அவர முன்னிறுத்தி மகளிர் மாநாடுகளை நடத்தினாலும் மாநில அரசியலுக்கு வர்றதுதான் விரும்புறாங்களாம். கனிமொழி திமுகவின் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது மாநில அரசியலில் அவரது பங்கை வலுப்படுத்தும் நகர்வாக பார்க்கப்படுகிறது.
கனிமொழி தன்னோட விருப்பத்தை கட்சி தலைமையிடம் சொல்லியும் எந்தவித பதிலும் இல்லை என்ற நிலையிலும் தனது முடிவில கனிமொழி உறுதியாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அவரது பிறந்த நாள், பொங்கல் சமயத்தில் அவருக்கு வாழ்த்து சொன்னவர்கள், பதாகைகள் வைத்தவர்கள் யார் யார்? என்கிற தகவல்களை திமுக தலைமை நோட்டம் விட்டதாகவும் கூறப்படுகிறது.
அதைப்பற்றி கனிமொழியிடம் கேட்டால், அதைப்பற்றி நீங்கள் கேட்பதற்கோ, பேசுவதற்கோ என்னிடம் எந்த பதிலும் இப்போதைக்கு இல்லை எனக் கூறி இருக்கிறார். ஆனால் டெல்லி அரசியலை விட்டு கனிமொழி வரப்போவதில்லை என கட்சி தலைமை கூறி வருகிறது. 2025 டிசம்பர் முதல் "கனிமொழி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடலாம்", "மாநில அரசியலுக்கு வர வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள்" என்று திமுக வட்டாரங்களில் பேசப்பட்டது. தூத்துக்குடி அல்லது சென்னையில் ஒரு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் தற்போது மக்களவை எம்பியாகவும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் உள்ளார். ஆனால் மாநில அரசியலில் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினராவது கட்சியில் தனது அடுத்த கட்டத்திற்கு உதவும் என நினைக்கிறார்.
மொத்தத்தில், கனிமொழி மாநில அரசியலில் ஆழமாக ஈடுபட விரும்புவது தெளிவாகத் தெரிகிறது, குறிப்பாக 2026 தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடும் வாய்ப்பு வலுவாக உள்ளது. இது திமுகவின் பெண் தலைமையை வலுப்படுத்தவும், குடும்ப அரசியல் சமநிலைக்கும் உதவும் என கனிமொழி எதிர்பார்க்கிறார்.
