History of Rama searching Sita in Chennai : இராமாயணப் போருக்கு முன்னதாக சீதையைத் தேடிச் சென்ற இராமபிரான், போரூரில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்ட வரலாறு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சென்னை போரூரில் குரு பகவானுக்கு என்று ஒரு ஆலயம் உள்ளது. இத்தலத்து மூலவர் பெயர் ஸ்ரீ இராமநாதஸ்வரர் சீதையை தேடிவந்த ராமர் போரூரில் நெல்லி மரத்தடியில் அமர்ந்தார். ஞான திருஸ்டியால் பூமிக்கடியில் லிங்கம் இருப்பதையும், அதன் தலைப்பகுதியில் தன் கால்பட்டு தோசம் பெற்றார் ராமர். ஒரு மண்டலம் தவம் செய்தார். அந்தத் தோஷத்திலிருந்து விடுபடக் கடுமையான விரதம் அதாவது, ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்கனி மட்டுமே அருந்தி விரதத்தை மேற்கொண்டார். அதனால் மகிழ்ந்த சிவன் பூமியை பிளந்து கொண்டு வெளிவந்தார். ராமர் அச்சிவனை கட்டித்தழுவி அமிர்தலிங்கமாக மாற்றினார்.
திருப்பூர் சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோயில் – வரலாறு!
இராமநாத ஈசுவரர் எனவும் பெயரிட்டார். தாய் பார்வதி தேவியும் இவருக்கு காட்சி தந்து அருளினார். அந்த தாயின் பெயர் ஸ்ரீ சிவகாமசுந்தரி ஆகும். ஸ்ரீ ராமரும், சிவனாரை தனது குருவாக வரித்து வணங்கி, ராவணன் தனது பத்தினி சீதையை தூக்கிச் சென்றது எந்த திசையாக சென்றால் ஸ்ரீலங்காவை அடைய முடியும் எனவும் வேண்டினார். பிறகு, ராமரின் வேண்டுகோளுக்கு இணங்க சிவனார் திசையை காட்டி அருளிய பின் ஸ்ரீலங்காவை நோக்கி பயணம் மேற்கொண்டார், ஸ்ரீ ராமர். பின்னர் சிவனிடம் சீதை இருக்கும் இடத்தை கேட்டு அறிந்து இங்கிருந்து போருக்குப் புறப்பட்டதால் இவ்வூருக்கு 'போரூர் 'எனப் பெயர் வந்தது. ராமருக்கு குருவாக விளங்கியதால் இங்குள்ள சிவன், குரு அம்சமாக விளங்குவது பரிகார பூஜை அனைத்தும் சிவனுக்கே நடைபெறுகிறது. தலவிருட்சம் 'நெல்லி மரம்' விசேசமான ஒன்றாகும்.
ராமர் வழிபட்ட வட இராமேஸ்வரம்! சென்னையில் குரு பகவானின் அருளை அள்ளித்தரும் அற்புத தலம்!
