- Home
- Sports
- Sports Cricket
- விராட் கோலி மேஜிக் இன்னிங்ஸ்.. புகழ்ந்து தள்ளிய பயிற்சியாளர்.. அட! இவரா இப்படி சொன்னது!
விராட் கோலி மேஜிக் இன்னிங்ஸ்.. புகழ்ந்து தள்ளிய பயிற்சியாளர்.. அட! இவரா இப்படி சொன்னது!
ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்றாவதாக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கை விராட் கோலி முந்தினார். இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் சாதனையை நோக்கி கிங் கோலி வீறுநடை போடுகிறார்.

விராட் கோலி சூப்பர் சதம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழந்தாலும் கடைசி போட்டியில் விராட் கோலி சூப்பர் சதம் விளாசி இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் நம்பிக்கையை அளித்து பல சாதனைகளையும் படைத்தார். விராட் கோலி 108 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 124 ரன்கள் எடுத்தார். இது அவரின் 85வது சர்வதேச சதமாகும்.
கோலியை பாராட்டிய பயிற்சியாளர்
மேலும் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் சாதனையை நோக்கி கிங் கோலி வீறுநடை போடுகிறார். இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி அடித்த சதத்தை அவரது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா பாராட்டியுள்ளார். கோலி தனது உச்சகட்ட ஃபார்மை வெளிப்படுத்தி, இந்தியாவுக்காக அற்புதமாக விளையாடினார் என்று அவர் கூறியுள்ளார்.
அற்புதமான இன்னிங்ஸ்
இது தொடர்பாக பேசிய ராஜ்குமார் சர்மா, ''விராட் கோலி நேற்று ஒரு அற்புதமான இன்னிங்ஸ் ஆடினார், மேலும் அவர் எந்த மாதிரியான ஃபார்மில் இருக்கிறார் என்பதைக் காட்டினார். துரதிர்ஷ்டவசமாக, அதிக விக்கெட்டுகள் விழுந்ததால் அவரால் இந்தியாவுக்கு போட்டியை வென்று கொடுக்க முடியவில்லை. அவர் தனது அணி மற்றும் நாட்டுக்காக விளையாடிய விதம் பாராட்டத்தக்கது'' என்று தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக சாதனை
விராட் கோலி நியூசிலாந்துக்கு எதிராக 36 இன்னிங்ஸ்களில் ஏழாவது ஒருநாள் சதம் விளாசியுள்ளார். இது அந்த அணிக்கு எதிராக ஒரு பேட்டர் அடித்த அதிகபட்சமாகும். மேலும்டெஸ்டில் மூன்று சதங்கள் உட்பட அனைத்து வடிவங்களிலும் நியூசிலாந்துக்கு எதிராக அவர் அடித்த 10 சதங்கள், அந்த அணிக்கு எதிராக ஒரு பேட்டர் அடித்த அதிகபட்சமாகும்.
சதம் அடித்தும் இந்தியா தோல்வி
இது மட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்றாவதாக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கை விராட் கோலி முந்தினார். முன்னதாக இந்தூரில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நியூசிலாந்து இந்தியாவில் தனது முதல் ஒருநாள் தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.
டேரில் மிட்செல் (137) மற்றும் கிளென் பிலிப்ஸ் (106) ஆகியோரின் சதங்களால் நியூசிலாந்து 337 ரன்களை எட்டியது. இந்திய அணி 296 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

