- Home
- Tamil Nadu News
- விஜய்யை திக்குமுக்காட வைத்த சிபிஐ.. 6 மணி நேரம்.. தளபதிக்கு தலைவலி கொடுத்த 'அந்த' கேள்விகள்!
விஜய்யை திக்குமுக்காட வைத்த சிபிஐ.. 6 மணி நேரம்.. தளபதிக்கு தலைவலி கொடுத்த 'அந்த' கேள்விகள்!
கடந்த வாரம் முதற்கட்ட விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜய், இன்று காலை 10 மணி அளவில் மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை என 6 மணி நேரம் விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

விஜய்யிடம் 2வது கட்டமாக சிபிஐ விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் நடத்திய 2ம் கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது. ஏற்கெனவே கடந்த வாரம் முதற்கட்ட விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜய், இன்று காலை 10 மணி அளவில் மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை என 6 மணி நேரம் விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
தளபதிக்கு தலைவலி கொடுத்த அந்த கேள்விகள்
இடையில் அரை மணி நேரம் மதிய உணவு சாப்பிட அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்பு தொடர்ந்து நடந்த விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இன்றைய விசாரணையில் கரூருக்கு தாமதமாக வந்தது ஏன்?
கூட்ட நெரிசல் ஏற்பட்டது முன்கூட்டியே தெரியுமா? தெரியாதா? வேனில் நின்றபோதும் கூட்டத்தில் மக்கள் மயங்கி விழுந்தது தெரியாதா? மக்கள் மயங்கி விழுந்தது தெரிந்தும் ஏன் பேச்சை நிறுத்தவில்லை? மக்களுக்கு தண்ணீர் பாட்டிலை வீசியுள்ளீர்கள். அப்போது கூட நிலைமை மோசமானதை உணரவில்லையா?
காவல்துறை மீது விஜய் குற்றச்சாட்டு
கூட்டம் அதிகமாக இருந்தபோதும் வாகனத்தில் முன்னோக்கி சென்றது ஏன்? என்பது உள்பட அடுக்கடுக்கான கேள்விகளை விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் எழுப்பியுள்ளனர். இந்த கேள்விகளுக்கு விஜய் பொறுமையாக, தெளிவாக பதில் அளித்துள்ளார்.
தனது வாகனம் எப்படி செல்ல வேண்டும்? எங்கே நிறுத்த வேண்டும்? என காவல்துறையின் அறிவுறுத்தலை பின்பற்றியதாகவும், காவல்துறை தான் சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை என விஜய் சிபிஐயிடம் புகார் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யிடம் இனிமேல் விசாரணை இல்லை
இன்று 2ம் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், சிபிஐ அலுவலகத்தில் இருந்து விஜய் புறப்பட்டு சென்றார். விஜய்யிடம் முழுமையாக விசாரணை முடிந்து விட்டதாகவும், இனிமேல் விசாரணை நடக்காது எனவும் தவெக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் பேசிய தவெகவின் சி.டி.நிர்மல் குமார், ''கரூரில் என்ன நடந்தது? என சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு விஜய் பதிலளித்துள்ளார். சிபிஐ விசாரணை தொடர்பாக ஊடகங்களில் வதந்தி பரபரப்படுகிறது. சிபிசி குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்படும் என்பது தவறான தகவல்'' என்று தெரிவித்தார்.

