கடந்த 24 மணிநேரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. ஆகையால் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என மியாட் மருத்துவமனையில் தகவல் தெரிவித்துள்ளது.

12:02 AM (IST) Nov 30
சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
12:02 AM (IST) Nov 30
சென்னையில் மழை பாதித்துள்ள பகுதிகளில் உதவி தேவைப்பட்டால் 1913 என்ற இலவச அவசர உதவி எண்ணை அழைக்கலாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
12:00 AM (IST) Nov 30
தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 30) விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
06:14 PM (IST) Nov 29
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
05:29 PM (IST) Nov 29
என்னுடைய கனவெல்லாம், தமிழ்நாட்டு மாணவர்களும், மாணவிகளும் உலகம் எல்லாம் சென்று சாதிக்கவேண்டும் என்பதுதான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
04:41 PM (IST) Nov 29
தமிழக அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
04:17 PM (IST) Nov 29
அடுத்த ஆண்டு புதிய ஃபேமிலி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளாதாக ஏதர் நிறுவனம் தெரிவித்துள்ளது
03:28 PM (IST) Nov 29
தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல் நடைபெற்று வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்
03:18 PM (IST) Nov 29
விமானத்தில் செல்போனை ஏன் ஏரோபிளேன் மோடில் வைக்க சொல்கிறார்கள் என்பது பற்றி இங்கு காணலாம்.
02:59 PM (IST) Nov 29
அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள ஏகே 63 படத்தை இயக்கும் போட்டியில் ஆதிக் மற்றும் கோபிசந்த் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், அது யார் என்பது குறித்து பார்க்கலாம்.
02:04 PM (IST) Nov 29
டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் பல்வேறு புதிய் விதிகள், நடைமுறைகள் அமலுக்கு வரவுள்ளன.
01:39 PM (IST) Nov 29
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ள அர்ச்சனாவும், விஷ்ணுவும் வாக்குவாதம் முற்றி சண்டையிட்டுக்கொண்டதால் பிக்பாஸ் வீடே பரபரப்பானது.
01:12 PM (IST) Nov 29
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது
01:08 PM (IST) Nov 29
ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த கே.டி.ராகவனுக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை முக்கிய பதவியை வழங்கியுள்ளார்.
01:06 PM (IST) Nov 29
கடந்த 24 மணிநேரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. ஆகையால் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என மியாட் மருத்துவமனையில் தகவல் தெரிவித்துள்ளது.
12:45 PM (IST) Nov 29
தெலங்கானாவில் ஆட்டோ டிரைவர்கள், கிக் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, அவர்களின் நலனுக்காக சட்டமியற்றப்படும் என உறுதியளித்தார்
12:31 PM (IST) Nov 29
தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமான நடிகை திவ்யா ஸ்பந்தனாவின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் பற்றி விரிவாக பார்க்கலாம்.
12:05 PM (IST) Nov 29
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் 8 செல்போன்கள் மற்றும் 4 சிம்கார்டுகளை ஆய்வு செய்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் அறிக்கையாக இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது
12:03 PM (IST) Nov 29
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே செல்லும் இரவு ரயில் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
12:02 PM (IST) Nov 29
சென்னையில் மழைக்கு ஒதுங்கிய முன்னாள் மாமன்ற உறுப்பினரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான சம்பத் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
11:42 AM (IST) Nov 29
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்து வரும் புதிய படத்திற்கு கிளாசிக் ஹிட் பட டைட்டிலை தேர்ந்தெடுத்து வைத்துள்ளனர்.
11:15 AM (IST) Nov 29
பருத்திவீரன் படத்தின் பிரச்சனை குறித்து தான் பேசியது இயக்குனர் அமீரை காயப்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
11:07 AM (IST) Nov 29
உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கத்தினுள் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களது அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளனர்
10:29 AM (IST) Nov 29
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
09:49 AM (IST) Nov 29
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அக்கட்சியின் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.
09:41 AM (IST) Nov 29
நடிகர் ஜெயம் ரவி சோலோ ஹீரோவாக நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை தழுவி வருவதால், அவருக்காக அவரது அண்ணன் மோகன் ராஜா முக்கிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்.
08:55 AM (IST) Nov 29
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
08:22 AM (IST) Nov 29
சிறுபான்மை மக்களை திமுக தந்திரமாக ஏமாற்றி வருகிறது. இந்த இரண்டரை ஆண்டுகளில் திமுகவினர் என்ன நன்மை செய்துள்ளார் என்பதை கிறிஸ்தவர்கள் எண்ணி பார்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
07:27 AM (IST) Nov 29
அதிமுக அலுவலகத்தில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கில் முகாந்திரம் இருந்தால் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.