Asianet News TamilAsianet News Tamil

கனமழை எதிரொலி: சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

இரவில் மணிக்கணக்காகத் தொடரும் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

TamilNadu Rain Update: Holiday announced for schools in 4 districts including Chennai tomorrow sgb
Author
First Published Nov 29, 2023, 10:05 PM IST | Last Updated Nov 30, 2023, 12:08 AM IST

தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நவம்பர் 30ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்திலும் இரவு பெய்யும் மழையளவைப் பொறுத்து காலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி அறிவிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் வியாழக்கிழமை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஐந்து பகுதிகளில் மிக அதிகமாக மழை பெய்துள்ளது. மீனம்பாக்கம் 19 செ.மீ., குளத்தூர், அம்பத்தூரில் 14 செ.மீ., திருவிக நகரில் 13 செ.மீ, மலர் காலணியில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்னும் பல்வேறு பகுதிகளிலும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் 10 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்திருக்கிறது.

ஜிம் செல்லும் ஆண்களில் 7 பேரில் ஒருவருக்கு ஆண்மைக்குறைவு அபாயம்! ஆய்வில் ஷாக்கிங் முடிவுகள்!

சென்னையில் அதிக மழை பாதிப்பு உள்ள பகுதிகளில் உதவி தேவைப்படுவோர் 1913 என்ற இலவச அவசர உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மாநகராட்சி சார்பில் மழை நீர் தேங்காமல் இருக்க வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தும் சில இடங்களில் மழைநீர் தேக்கம் காணப்பட்டால், அவசர உதவி எண்ணைத் தொடர்புகொண்டால் ராட்சத இயந்திரங்கள் மூலம் நீர் உறிஞ்சி அகற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்டங்களில் மழைப்பொழிவைப் பொறுத்து நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்யலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மழை பாதித்துள்ள பகுதிகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் களத்திற்கே சென்று மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.

இதனிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை முதல் கனமழை பெய்துவருகிறது. கொளத்தூர் பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, இரண்டு மணிநேரம் மழை பெய்யாமல் இருந்தால் தேங்கியிருக்கும் நீர் முழுமையாக வடிந்துவிடும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தின் 25 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வட மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா போல விஜயகாந்துக்கும் டிரக்கியாஸ்டமி சிகிச்சை! மருத்துவமனை கொடுத்த புதிய அப்பேட்!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios