டிசம்பர் 1ஆம் தேதி முதல் என்னென்ன மாறப் போகிறது? அமலுக்கு வரும் புதிய விதிகள்!
டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் பல்வேறு புதிய் விதிகள், நடைமுறைகள் அமலுக்கு வரவுள்ளன.
நாடு முழுவதும் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பல்வேறு மாற்றங்கள் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் தொடக்கத்தில் நடைமுறைக்கு வரவுள்ளது. அந்த வகையில், புதிய சிம் கார்டுகள் வாங்குவது, மலேசியாவிற்கு விசா இல்லாத நுழைவு, பயன்படுத்தப்படாத ஜிமெயில் கணக்குகள் நீக்கப்படுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நடைபெறவுள்ளன.
சிம் கார்டு
மோசடிகளைத் தடுக்கும் முயற்சியில், தொலைத்தொடர்புத் துறை டிசம்பர் 1ஆம் தேதி முதல் சிம் கார்டுகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் புதிய விதிமுறைகளை அமல்படுத்தவுள்ளது. புதிய விதிகளின்படி அனைத்து சிம் கார்டு விற்பனையாளர்களும் சரிபார்ப்புக்கு சமர்ப்பிக்க வேண்டும். மீறினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு, ஒரு ஐடியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிம்களை மட்டுமே வாங்க முடியும். மேலும், புதிய விதிகளின்படி, சிம் கார்டு விற்பனையாளர்கள் எண்ணை பதிவு செய்யும் முன் KYC செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.
மலேசியா விசா இல்லாத நுழைவு
இந்தியர்கள் மற்றும் சீன நாட்டவர்கள் 30 நாட்களுக்கு விசா இல்லாமல் அம்லேசியாவில் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்தார். இந்த நடவடிக்கையானது பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில், மலேசியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடைமுறை டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை: மருத்துவமனை அறிக்கை!
ஜிமெயில் கணக்குகள் நீக்கம்
பயன்படுத்தப்படாத ஜிமெயில் கணக்குகள் நீக்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், அதன் அனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான கூகுள் கணக்கின் செயலிழக்கும் காலம் இரண்டு ஆண்டுகளாக இருக்கும் என்று அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 1ஆம் தேதி முதல், இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத அல்லது அணுகப்படாத அனைத்து கூகுள் கணக்குகளும் பாதிப்புக்கு உள்ளாகும்.
ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு
ஹெச்டிஎப்சி வங்கி அதன் ரெகாலியா கிரெடிட் கார்டின் சில விதிகளை மாற்றியுள்ளது Regalia கிரெடிட் கார்டின் சில சேவைகளை பெற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். குறிப்பாக, இலவச லவுஞ்ச் அணுகல் வவுச்சர் உபயோகத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன.
எல்பிஜி சிலிண்டர் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தின்படி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்தவகையில், எண்ணெய் நிறுவனங்கள் சமையல் சிலிண்டர் விலையை ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி முடிவு செய்து வருகின்றன. ஐந்து மாநில தேர்தல் முடிவடைந்துள்ளதால் விலை அதிகரிக்கலாம் அல்லது எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலை கருத்திக் கொண்டு சிலிண்டர் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.