கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் படத்துக்காக கிளாசிக் ஹிட் பட டைட்டிலை தட்டிதூக்கிய Red Giant
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்து வரும் புதிய படத்திற்கு கிளாசிக் ஹிட் பட டைட்டிலை தேர்ந்தெடுத்து வைத்துள்ளனர்.
kiruthiga udhayanidhi, Jayam Ravi
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த இறைவன் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தாலும், அவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன. அவர் நடிப்பில் தற்போது பிரதர், ஜீனி, சைரன், தக் லைஃப், தனி ஒருவன் 2 ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் பிரதர் திரைப்படத்தை எம்.ராஜேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் அனுபமா பரமேஸ்வரனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
jayam ravi
அடுத்ததாக ஜெயம் ரவி நடிக்கும் மற்றொரு திரைப்படமான ஜீனியை இயக்குனர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றிய புவனேஷ் அர்ஜுனன் இயக்குகிறார். இப்படத்தில் ஜெயம் ரவி உடன் கீர்த்தி ஷெட்டி, வாமிகா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்து வருகின்றார்.
kiruthiga udhayanidhi, Nithya menen, Jayam Ravi, AR Rahman
இதுதவிர அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் திரைப்படமும் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதுமட்டுமின்றி கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் மற்றும் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் ஆகியவற்றிலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார் ஜெயம் ரவி.
kadhalikka neramillai movie poster
இந்த நிலையில், அவர் நடிப்பில் உருவாகும் மற்றொரு படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் ஜெயம் ரவி. இதில் நித்யா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார். அப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. அப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு காதலிக்க நேரமில்லை என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் இதற்கு முன்னர் நாகேஷ் நடிப்பில் கடந்த 1964-ம் ஆண்டு காதலிக்க நேரமில்லை என்கிற பெயரில் ஒரு படம் வெளியாகி ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பருத்திவீரன் சர்ச்சை... அமீரிடம் மன்னிப்பு கேட்டார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா