பருத்திவீரன் சர்ச்சை... அமீரிடம் மன்னிப்பு கேட்டார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா
பருத்திவீரன் படத்தின் பிரச்சனை குறித்து தான் பேசியது இயக்குனர் அமீரை காயப்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
gnanavel raja, Ameer
இயக்குனர் அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் ரிலீசாகி 17 ஆண்டுகள் ஆனாலும் அப்படத்தின் பஞ்சாயத்து இன்னும் ஓய்ந்தபாடில்லை. படம் வெற்றிபெற்று மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தி இருந்தாலும், அதன் ஷூட்டிங் சமயத்தில் அமீருக்கும் அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை கோர்ட் வரை சென்றுவிட்டது. அந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி மிகவும் வைரல் ஆனது.
paruthiveeran
அதில் அமீரை திருடன் என அவர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் இந்த பேச்சுக்கு இயக்குனர்கள் பாரதிராஜா, சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், அமீர் பற்றி தான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு தெரிவித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
gnanavel raja
அதில், 'பருத்தி வீரன்' பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இதுநாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே "அமீர் அண்ணா" என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.
Ameer
அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஞானவேல் ராஜா.
இதையும் படியுங்கள்... அமீர் பற்றிய எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது அவமதிக்கும் செயல்! ஞானவேல் ராஜா செயலுக்கு... பாரதி ராஜா பதிலடி