தமிழக அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
தமிழக அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, குழந்தைவேலு ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துகுவிப்பு வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996-2001 ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் இந்த 4 அமைச்சர்களும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக, அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2015ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துகுவிப்பு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
21ஆம் நூற்றாண்டின் அடிமைத்தனம்: தெலங்கானா கிக் தொழிலாளர்களுக்கு ராகுல் அளித்த உறுதி!
காலதாமதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறி அதிமுக அரசு மேல்முறையீடு செய்த சொத்துக்குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவாய், நரசிம்மா அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல், 2002-2004 வரை மதுரை மேயராக இருந்த குழந்தை வேலு மீதான வழக்குகளையும் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.