சோலோ ஹீரோவாக தடுமாறும் ஜெயம் ரவி! தம்பியின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த அண்ணன் மோகன் ராஜா போட்ட மாஸ்டர் பிளான்
நடிகர் ஜெயம் ரவி சோலோ ஹீரோவாக நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை தழுவி வருவதால், அவருக்காக அவரது அண்ணன் மோகன் ராஜா முக்கிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்.
Jayam ravi, Mohan Raja
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் ஜெயம் ரவி. வெற்றிநாயகனாக வலம் வந்த ஜெயம் ரவி கடந்த சில ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் படம் மட்டுமே மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அது மல்டி ஸ்டாரர் படம், அதைத் தவிர்த்து அவர் சோலோ ஹீரோவாக நடித்த படங்கள் அனைத்தும் படுதோல்வி அடைந்தன.
Thani Oruvan 2
பூமி தொடங்கி, அகிலன், இறைவன் என வரிசையாக அவர் நடிப்பில் வெளிவந்த மூன்று சோலோ ஹீரோ படங்களும் படு தோல்வியை சந்தித்தன. இதனால் சோலோ ஹீரோவாக ஜெயம் ரவியின் மார்க்கெட் பயங்கரமாக அடிவாங்கி இருக்கிறது. இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க தன்னுடைய அண்ணன் உடன் அண்மையில் கூட்டணி அமைத்தார் ஜெயம் ரவி. இருவரும் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீண்டும் இணைய உள்ளதாக அறிவித்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Jayam Ravi
இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு ஆச்சர்ய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தனி ஒருவன் 2 மட்டுமின்றி மற்றுமொரு பார்ட் 2 படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம் ஜெயம் ரவி. அப்படத்தையும் அவரது அண்ணன் மோகன் ராஜா தான் இயக்க உள்ளாராம். அது இவர்கள் கூட்டணியில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் இரண்டாம் பாகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Jayam Ravi brother Mohan Raja
முதல் பாகத்திலேயே நதியா இறந்துவிட்டதால் அவர் இரண்டாம் பாகத்தில் இடம்பெற மாட்டார் என்றும் கூறப்படுகிறது. ஜெயம் ரவியின் ஆரம்ப காலகட்டத்தில் அவரை வைத்து மோகன் ராஜா இயக்கிய ஜெயம், எம் குமரன், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் ஆகிய படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அந்த கூட்டணி தற்போது அடுத்தடுத்து 2 படங்களின் இணைய உள்ளதால், அது ஜெயம் ரவியின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஷாருக்கான் உடன் மோத ரெடியான பிரபாஸ்... அனல்பறக்க வெளியானது சலார் டிரைலர் ரிலீஸ் தேதி