Asianet News TamilAsianet News Tamil

AIADMK: அதிமுக அலுவலக வன்முறை.. இபிஎஸ் மீது நடவடிக்கை? சென்னை உயர்நீதிமன்றம் க்ரீன் சிக்னல்..!

 பொதுக்குழு நடந்த அன்றைய தினமே ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் சென்றார். அப்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் வெடித்தது. ஒருவரையோருவர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டதால் அந்த இடமே கலவரமாக  காட்சி அளித்தது.

AIADMK office violence... Action against Edappadi Palanisamy tvk
Author
First Published Nov 29, 2023, 6:43 AM IST | Last Updated Nov 29, 2023, 6:43 AM IST

அதிமுக அலுவலகத்தில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கில் முகாந்திரம் இருந்தால் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பின்னர், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர் கட்சியில் அதிரடியாக நீக்கப்பட்டனர். பொதுக்குழு நடந்த அன்றைய தினமே ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் சென்றார். அப்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் வெடித்தது. ஒருவரையோருவர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டதால் அந்த இடமே கலவரமாக  காட்சி அளித்தது.

இதையும் படிங்க;- திமுகவில் எதுக்கு உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்குறீங்க! கனிமொழியை தலைவரா ஆக்க வேண்டியது தானே? ஜெயக்குமார்!

AIADMK office violence... Action against Edappadi Palanisamy tvk

இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சி.வி. சண்முகம் அதிமுக தலைமை அலுவலக பூட்டை உடைத்து சொத்து ஆவணங்கள், வாகனங்களில் ஆர்.சி புத்தகங்கள், கம்ப்யூட்டர் உள்பட பல பொருட்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எடுத்து சென்று விட்டதாக ராயப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

AIADMK office violence... Action against Edappadi Palanisamy tvk

அதேபோல், எடப்பாடி பழனிசாமி அறிவுரையின் பேரில் குண்டர்கள் தங்களை தாக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளரான ஜேசிடி பிராபகர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், எடப்பாடி பழனிசாமி, சி.வி. சண்முகம், தி.நகர் சத்தியா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருந்தார். 

AIADMK office violence... Action against Edappadi Palanisamy tvk

இந்நிலையில், தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜேசிடி பிராபகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது ஜேசிடி பிராபகர் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் இரண்டு வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios