Asianet News TamilAsianet News Tamil

Train Cancelled: சென்னை கடற்கரை - தாம்பரம் இரவு ரயில் சேவை இன்று முதல் ரத்து! எத்தனை நாட்கள் வரை தெரியுமா?

சென்னை மக்களின் பிரதான போக்குவரத்து சேவையாக மின்சார ரயில் இருந்து வருகிறது. இதன் மூலம் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், பெண்கள், முதியோர்கள், வியாபாரிகள் என பல லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். 

Chennai Beach - Tambaram night train service canceled from today tvk
Author
First Published Nov 29, 2023, 11:12 AM IST | Last Updated Nov 29, 2023, 11:50 AM IST

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே செல்லும் இரவு ரயில் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

சென்னை மக்களின் பிரதான போக்குவரத்து சேவையாக மின்சார ரயில் இருந்து வருகிறது. இதன் மூலம் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், பெண்கள், முதியோர்கள், வியாபாரிகள் என பல லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், முக்கிய போக்குவரத்தாக பார்க்கப்படும் இந்த மின்சார ரயில் சேவை அவ்வப்போது பராமரிப்பு காரணமாக ரத்து செய்யப்படுவது வழக்கம்.

இதையும் படிங்க;- Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 10 மாவட்டங்களில் தரமான சம்பவம் இருக்கு.. வானிலை மையம் அலர்ட்..!

இந்நிலையில், பராமரிப்பு காரணமாக இன்று முதல் கடற்கரை ரயில் நிலையம் – தாம்பரம் ரயில் நிலையம் இடையிலான இரவு மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- School College Holiday: வெளியான மாஸ் அறிவிப்பு.. பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ம் தேதி விடுமுறை.!

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் டிசம்பர் 14-ம் தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்த நாட்களில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயிலும் மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios