- Home
- Gallery
- School College Holiday: வெளியான மாஸ் அறிவிப்பு.. பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ம் தேதி விடுமுறை.!
School College Holiday: வெளியான மாஸ் அறிவிப்பு.. பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ம் தேதி விடுமுறை.!
கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 4-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகல்கோவிலில் கோட்டாறு பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. உலக அளவில் புனித சவேரியாருக்கென முதன் முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற பெருமையை பெற்றுள்ளது. சாதி சமய வேறுபாடுகள் இன்றி எல்லா மக்களும் நாடி வரும் பேராலயமாகும்.
சிறப்பு மிக்க இந்த பேராலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி 10 நாட்கள் அதாவது டிசம்பர் முதல் வாரத்தில் நிறைவடையும். அத்தகைய திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், டிசம்பர் 4ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நடக்கிறது. அன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கோட்டார் புனித சவேரியார் பேராலயம் விழாவை முன்னிட்டு டிசம்பர் 04ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் 16ம் தேதி சனிக்கிழமைகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.