ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன், அனிருத் கலந்து கொண்டனர்.

09:31 PM (IST) Jul 28
ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழா தற்போது நடந்துகொண்டிருக்கும் நிலையில், அதில் கலந்து கொண்டுள்ள பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. புகைப்படங்களை பார்க்க
09:08 PM (IST) Jul 28
இரும்பு மனிதர், கரும்பு மனிதராக வந்திருக்கிறார்.. அண்ணாமலையை புகழ்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!
09:07 PM (IST) Jul 28
சென்னை.. 16 கோடியில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம் - திறந்து வாய்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!
09:07 PM (IST) Jul 28
சென்னை.. 16 கோடியில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம் - திறந்து வாய்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!
09:04 PM (IST) Jul 28
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை ரம்யா கிருஷ்ணன்
08:43 PM (IST) Jul 28
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் நெல்சனை கட்டிப்பிடித்து தனது அன்பை பரிமாறிய ரஜினிகாந்த்
08:40 PM (IST) Jul 28
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை தமன்னா காவாலா பாட்டுக்கு நடனம் ஆடி அரங்கத்தையே அலற வைத்தார்.
08:35 PM (IST) Jul 28
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உடன் ரஜினிகாந்த்.
08:30 PM (IST) Jul 28
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் அனிருத்துக்கு முத்தமிட்ட ரஜினிகாந்த்
08:27 PM (IST) Jul 28
08:27 PM (IST) Jul 28
'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பர்ஃபாம்மென்ஸ் செய்வதற்காக தமன்னா மற்றும் அனிருத் தயாராகி வரும் வீடியோவை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
08:16 PM (IST) Jul 28
ராமேஸ்வரத்தில் இருந்து பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். நடைபயணத்தை இன்று மத்திய அமைச்சர் அமித் ஷா துவக்கி வைக்கிறார். இதற்கான விழாவில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு பேசினார்.
08:03 PM (IST) Jul 28
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் அனிருத், நெல்சன் கலந்து கொண்டனர்
07:57 PM (IST) Jul 28
ஜெயிலர் படத்தில் இடம் பெற்று இருக்கும் காவாலா பாட்டுக்கு நடிகை தமன்னா நடனம் ஆடி கலக்கி இருந்தார். அதற்கு தகுந்தவாறு இன்றும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று நடனம் ஆடினார்.
07:51 PM (IST) Jul 28
சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறனின் கையை பிடித்தவாறு நடந்த வரும் ரஜினிகாந்த்
07:50 PM (IST) Jul 28
ஜெயிலர் பட ஆடியோ லாஞ்சுக்கு படுமாஸாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ட்ரி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
07:49 PM (IST) Jul 28
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் ஆடியோ லாஞ்ச்
07:33 PM (IST) Jul 28
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முதல் முறையாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா, தற்போது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், படு பிரமாண்டமாக துவங்கி நடந்து வருகிறது.
03:34 PM (IST) Jul 28
என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக நிலத்தை கையகப்படுத்த கூடாது. எவ்வளவு விலை கொடுத்தாலும் இடங்களை விட்டுக் கொடுக்க முடியாது. என்எல்சி பிரச்சனை கடலூர் மாவட்ட பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
03:29 PM (IST) Jul 28
செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 50 சதவீதம் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
03:07 PM (IST) Jul 28
விவசாய விலை பொருட்கள் இரண்டு மடங்கு லாபம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் திருச்சியில் அரை நிர்வாண காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
02:19 PM (IST) Jul 28
என்எல்சி நிறுவன முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்
02:11 PM (IST) Jul 28
புதுமுக இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகி இருக்கும் டிடி ரிட்டர்ன்ஸ் என்கிற காமெடி படத்தின் விமர்சனம் இதோ.
01:53 PM (IST) Jul 28
இந்தியாவின் செமிகண்டக்டர் துறை பின் தங்க முந்தைய அரசுகளே காரணம் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்
01:53 PM (IST) Jul 28
உடுப்பி பெண்கள் வீடியோ சம்பவத்தில் கழிவறைகளில் ரகசிய கேமராக்கள் இல்லை என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்
01:45 PM (IST) Jul 28
ஏசியாநெட் எக்ஸிகியூட்டிவ் எடிட்டர் சிந்து சூர்யகுமாருக்கு எதிராக ஃபேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்டதாக கேரள முன்னாள் நீதிபதி சுதீப் மீது கேரள காவல்துறை இறுதியாக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
01:44 PM (IST) Jul 28
என்.எல்.சியை முற்றுகையிட்டு போராடிய அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
01:15 PM (IST) Jul 28
வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
01:14 PM (IST) Jul 28
இது வெறும் என்எல்சி பிரச்சினை இல்லை, தமிழ்நாட்டின் உரிமை பிரச்சினை இது. விளையும் பயிரை நாசப்படுத்துவது, தாயின் கருவை அழிப்பதற்கு சமம். மக்களின் நிலங்களை பறிக்கும் என்எல்சி நெய்வேலியில் இருந்து வெளியேற வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார்.
01:13 PM (IST) Jul 28
கடலூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாமகவின் முற்றுகை போராட்டத்தின் எதிரொலியாக, டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
12:48 PM (IST) Jul 28
ஆந்திரப் பிரதேச விவசாயி தக்காளியை விற்று 1 மாதத்தில் 3 கோடி சம்பாதித்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
12:28 PM (IST) Jul 28
பாரத ஸ்டேட் வங்கியின் வருடாந்திர வைப்புத் திட்டம் மூலம் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதை பார்க்கலாம்.
12:18 PM (IST) Jul 28
சிறார் சீர்திருத்த இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
12:18 PM (IST) Jul 28
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என பாஜக எம்.பி., மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்
12:17 PM (IST) Jul 28
மணிப்பூர் வன்முறை மத மோதல் அல்ல என ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் இந்திய கார்டினல் ஓஸ்வால்ட் கிரேசியாஸ் தெரிவித்துள்ளார்
11:50 AM (IST) Jul 28
கொடநாடு கொலை வழக்கு விசாரணை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இடைக்கால விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கி விசாரணையை நீதிபதி ஸ்ரீதர் ஒத்திவைத்தார்.
11:12 AM (IST) Jul 28
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் அறிவிப்புக்கு பிறகு டிஸ்னி ஹாட்ஸ்டாரும் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
10:48 AM (IST) Jul 28
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 20,000 கன அடியாக அதிகரித்ததை அடுத்து பரிசல் இயக்கவும் குளிக்கவும் தடை விதித்தது, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
10:41 AM (IST) Jul 28
ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை அமைச்சர்கள் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்