'ஜெயிலர்' ஆடியோ லான்ச்சில் மாஸ் என்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! வீடியோ
ஜெயிலர் பட ஆடியோ லாஞ்சுக்கு படுமாஸாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ட்ரி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், நடித்து முடித்துள்ள ஜெய்லர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் இந்த படத்தில் நடித்துள்ள தமன்னா, மோகன் லால், ஜாக்கி ஷெரிப், சிவராஜ் குமார், வசந்த் ரவி, மாரிமுத்து, யோகி பாபு, ரோபோ சங்கர், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அனிருத் இசையில் இதுவரை வெளியான இந்த படத்தின் மூன்று லிரிக்கல் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தற்போது ஆடியோ லாஞ்சுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலாநிதிமாறனின் கையைப் பிடித்துக் கொண்டு ஹுக்கும் பாடலுடன் படுமாஸாக என்ட்ரி கொடுத்த வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.