Asianet News TamilAsianet News Tamil

இரும்பு மனிதர், கரும்பு மனிதராக வந்திருக்கிறார்.. அண்ணாமலையை புகழ்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் துவங்கி சுமார் 110 நாட்கள் பாதயாத்திரை செய்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, இறுதியாக சென்னையில் தனது பாத யாத்திரையை நிறைவு செய்ய உள்ளார் கே. அண்ணாமலை அவர்கள். 

ADMK Ex Minister Udhayakumar wished K Annamalai on his padayatra
Author
First Published Jul 28, 2023, 7:41 PM IST

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுடைய தலைமையில் ராமேஸ்வரத்தில், "என் மண் என் மக்கள்", என்ற தலைப்பில் அண்ணாமலை மேற்கொள்ள பாதயாத்திரையை துவங்கி வைத்து சிறப்பித்தார். பாஜகவின் கூட்டணியில் உள்ள பல கட்சி பிரமுகர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, அண்ணாமலைக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இந்நிலையில் அதிமுகவின் முள்ளாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் பேசிய பொழுது, ராமர் வழிபட்ட சிவலிங்கத்தை கொண்டிருக்கிற ராமநாதபுரம் இன்று இந்திய வரைபடத்தில் கடைசியில் இருந்தாலும், அமித் ஷா அவர்களுடைய வருகையினால் ராமநாதபுரத்தை பற்றி பலருக்கும் இன்று தெரிய வந்துள்ளது என்று கூறினார். 

தென்னை தொழில் நிறுவனங்களின் கோரிக்கை: உயர்மட்ட குழு அமைப்பு - முதல்வர் ஸ்டாலின்!

இந்தியாவின் இரும்பு மனிதரான அமித்ஷா அவர்கள் துவங்கி வைக்கும் இந்த விழாவில், இரும்பு மனிதராக இருந்து கரும்பு மனிதராக வந்திருக்கிற அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், அவருடைய இந்த பாதயாத்திரை வெற்றி பெற வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்தார். 

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனையை அங்குள்ள மக்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக அண்ணாமலை இந்த பாதயாத்திரையை மேற்கொள்ள  உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இன்று ஜூலை 28ம் தேதி கே. அண்ணாமலை அவர்கள் இந்த பயணத்தை தொடங்கியுள்ளார், இதற்காக விசேஷமான பேருந்து ஒன்றும் ராமேஸ்வரம் வந்துள்ளது. நாடாளுமன்ற பொது தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாஜக அரசை பலப்படுத்தும் நோக்கத்துடன் அண்ணாமலை இந்த பாதயாத்திரையை மேற்கொள்கிறார் என்று கூறப்படுகிறது.

"தமிழ் என்ற பெயரால் தமிழனை வஞ்சித்த திராவிடம்" - என் மண் என் மக்கள் விழாவில் பேசிய பாஜக தலைவர் எச். ராஜா!

Follow Us:
Download App:
  • android
  • ios