சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

08:48 PM (IST) Jul 18
'ஜவான்' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட, நடிகை பிரியா மணி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
05:22 PM (IST) Jul 18
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளின் பலம் என்ன? எத்தனை எம்.பி., க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்?
03:41 PM (IST) Jul 18
ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான கட்டுப்பாடுகளை தலிபான்கள் மேலும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது
03:20 PM (IST) Jul 18
ஆப்பிள் ஐபோன் 12 தற்போது அதிரடியாக விலை குறைந்துள்ளது. அது எவ்வளவு விலை குறைந்துள்ளது, எப்படி வாங்குவது போன்ற விவரங்களை பார்க்கலாம்.
02:04 PM (IST) Jul 18
சென்னை - யாழ்ப்பாணம் விமான சேவை தொடங்கியது. இதன் முழுமையான விவரங்களை இங்கு பார்க்கலாம்.
01:40 PM (IST) Jul 18
ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளின் மொபைல் சார்ஜர் தீப்பிடித்தது. போன்கள் மற்றும் சார்ஜர்கள் தீப்பிடிப்பதற்கான 7 பொதுவான காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
01:35 PM (IST) Jul 18
எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டத்தில் பேசி வரும் வைகோ, அந்த கூட்டணிக்கான பெயரை முன்மொழிந்துள்ளார்
01:14 PM (IST) Jul 18
சந்திரயான்-3 நிலவை அடைய ஏன் 40 நாட்கள் ஆகிறது? மங்களயானுக்கும் இதற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை பார்க்கலாம்.
12:40 PM (IST) Jul 18
ஆளுநர் ஆர்.என். ரவியை தொடர்ந்து எதிர்த்து வந்ததால் அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை என திமுக வழக்கறிஞர் சரவணன் குற்றம்சாட்டியுள்ளார்.
12:07 PM (IST) Jul 18
ஆப்பிள் ஐபோன் 11 தற்போது ஆப்பிள் ஏர்பாட்ஸ்-யை விட குறைந்த விலையில் விற்பனையாகிறது. அது எப்படி என்று முழுமையாக இங்கு பார்க்கலாம்.
11:50 AM (IST) Jul 18
மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலுக்கு சோனியா, ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்
11:39 AM (IST) Jul 18
கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு கேரள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
11:30 AM (IST) Jul 18
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு வருகிற 21ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது
11:10 AM (IST) Jul 18
பெங்களூருவில் கர்நாடகா அமைச்சர் டி.ஜான் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் மறைந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டியின் உடல்.
11:09 AM (IST) Jul 18
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
10:40 AM (IST) Jul 18
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அம்மாநில அரசு இன்று ஒருநாள் பொது விடுமுறை அறிவித்துள்ளது
10:09 AM (IST) Jul 18
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அது என்னென்ன இடங்கள் என்பதை பார்க்கலாம்.
10:02 AM (IST) Jul 18
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று மாலை மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது
09:51 AM (IST) Jul 18
கேரளா மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி (வயது 79) பெங்களூரில் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார்.
09:41 AM (IST) Jul 18
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 322 புள்ளிகள் அதிகரித்து 66,912 ஆகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 79 புள்ளிகள் அதிகரித்து 19,790 ஆகவும் வர்த்தகத்தை துவக்கியுள்ளது.
09:19 AM (IST) Jul 18
தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எக்கு கோட்டை போல் உறுதியாக இருக்கிறது. அமலாக்கத்துறையின் மூலம் எத்தகைய சோதனைகள், கைதுகள், சொத்துகளை முடக்கினாலும் அதற்கெல்லாம் எவரும் அஞ்சப் போவதில்லை என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
09:07 AM (IST) Jul 18
நெடுஞ்சாலை துறை முறைகேடு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.
08:38 AM (IST) Jul 18
கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி (79) காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
08:09 AM (IST) Jul 18
கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டி இன்று காலமானார். அவருக்கு வயது 79 ஆகும்.
07:28 AM (IST) Jul 18
சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் சுமார் 7 மணிநேரமாக நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து வீடு திரும்பினார்.
07:27 AM (IST) Jul 18
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி(79) உடல்நலக் குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
07:27 AM (IST) Jul 18
சென்னையில் 423வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.