Asianet News TamilAsianet News Tamil

ஷாக்கிங் நியூஸ்.. கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்..!

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி(79) உடல்நலக் குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். 

former Kerala Chief Minister Oommen Chandy passes away
Author
First Published Jul 18, 2023, 6:16 AM IST

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி(79) உடல்நலக் குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கேரளாவில் புதுப்பள்ளி  1943-ம் ஆண்டு அக்டோபர் 31-ம்.தேதி கோட்டயம், குமரகத்தில் பிறந்தார் உம்மன் சாண்டி. பள்ளி படிக்கும்போதே மாணவர் காங்கிரஸில் இணைந்து செயல்பட்டார். 1962-ல் காங்கிரஸ் மாணவர் அமைப்பான கே.எஸ்.யு-வின் கோட்டயம் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றார். 1965-ல் மாநில செயலாளராகவும், 1967-ல் கே.எஸ்.யு மாநில தலைவராகவும் பதவி வகித்தார். 1969-ல் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையும் படிங்க;- கோழி ரத்தத்தைப் பூசிக்கொண்டு தொழிலதிபர் மீது போலியாக பாலியல் புகார் கூறிய பெண்!

former Kerala Chief Minister Oommen Chandy passes away

1970-ல் புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.  புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 50 ஆண்டுகள் எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார். 2004-06 மற்றும் 2011-16 ஆண்டுகளில் கேரள முதல்வராக உம்மன்சாண்டி பதவி வகித்தார். 2006 முதல் 2011 வரை கேரளச் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார்.

இதையும் படிங்க;-  அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை.. ஆனால்.. ட்விஸ்ட் வைத்த அமலாக்கத்துறை..!

former Kerala Chief Minister Oommen Chandy passes away
சமீபத்தில் உம்மன் சாண்டிக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டதை அடுத்து பெங்களூருவில் உள்ள சின்மயா தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் உம்மன் சாண்டியி உயிழந்ததாக அவரது மகன் சாண்டி உம்மன் தகவல் தெரிவித்துள்ளார். இவரது இந்த அவரது ஆதரவாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios