Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை.. ஆனால்.. ட்விஸ்ட் வைத்த அமலாக்கத்துறை..!

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. 

Minister Ponmudi returned home after the investigation
Author
First Published Jul 18, 2023, 6:43 AM IST

சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் சுமார் 7 மணிநேரமாக நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து வீடு திரும்பினார். 

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் சோதனை நடைபெற்று வந்தது. சுமார் 20 மணிநேரம் நீடித்த சோதனை நிறைவு பெற்றது.

இதையும் படிங்க;- பொன்முடியை அமலாக்கத்துறை குறிவைக்க காரணம் என்ன.? 11 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கா.? வெளியான தகவல்

Minister Ponmudi returned home after the investigation

அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில், ரூ.10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் ரூ.70 லட்சம் மதிப்பிலான இந்திய ரூபாய் உள்பட மொத்தம் ரூ.80 லட்சம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, அமலாக்கத் துறை விசாரணைக்காக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர். ஆகையால், அமைச்சர் பொன்முடி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது. 

இதையும் படிங்க;-  அமலாக்கத்துறை விசாரணையில் அமைச்சர் பொன்முடி! மகன் கௌதம் சிகாமணியிடம் தனியே விசாரணை!

Minister Ponmudi returned home after the investigation

இந்நிலையில், அமைச்சர் பொன்முடியிடம் சுமார் 7 மணிநேரமாக நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து அதிகாலை வீடு திரும்பினார். மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios